மாதம் ரூ.50,000 வருமானம் ஈட்டுபவர்கள் SIP முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா?

பணத்தை முதலீடு செய்தால் தான் அந்த பணம் நமக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும். அப்படி பணம் முதலீடு செய்ய பலரும் தேர்வு செய்யும் ஒரு வழி மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள SIP முதலீட்டு முறை. இப்படி எஸ்ஐபி முதலீட்டின் மூலமாக பணத்தை முதலீடு செய்து ஒருவரால் கோடீஸ்வரர் ஆக முடியுமா என தெளிவாக பார்க்கலாம், ஒரு நபரின் மாத சம்பளம் 50,000 ரூபாய் என கொண்டு கணக்கிட்டு பார்க்கலாம்.

நிதித்துறை நிபுணர்கள் , எந்தவொரு நபரும் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு தங்களது மாத வருமானத்தில் குறைந்தபட்சம் 10% முதல் 15% வரை முதலீடு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர். அந்த வகையில் ஒரு நபரின் மாத வருமானம் 50,000 ரூபாய் என்றால், அதில் 10% முதல் 15% என்பது மாதத்திற்கு 5,000 முதல் 7,500 ரூபாய் வரை வரும். அப்படி என்றால் மாதம் 5,000 அல்லது 7,500 முதலீடு செய்தால் கோடிஸ்வரனாக முடியுமா என்றால் நிச்சயம் முடியும். இங்கு தான் காம்பவுண்டிங் தனது மேஜிக்கை நிகழ்த்துகிறது.

மாதம் ரூ.50,000 வருமானம் ஈட்டுபவர்கள் SIP முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா?

மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் போது சராசரியாக 12% முதல் 15% வரை ஆண்டு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தொடர்ந்து 24 ஆண்டுகள் , இந்த நபர் 7,500 ரூபாயை தவறாமல் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் இலக்கை எட்டிவிடலாம். இதில் அவர் செய்யும் முதலீடு மொத்தமே 21.6 லட்சம் தான் ஆனால் அந்த 24 ஆண்டுகள் தான் இதில் மேஜிக் செய்து பணத்தை 1 கோடி ரூபாயாக மாற்றுகிறது.

Also Read

இதே நபர் சம்பள உயர்வு கிடைக்கும் போதெல்லாம் எஸ்ஐபி ஸ்டெப் அப் செய்து முதலீட்டை அதிகரித்தால் விரைவிலேயே இந்த 1 கோடி ரூபாயை தொட்டுவிடலாம். கூட்டு வட்டியின் முழு பலனைப் பெற, குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

Recommended For You

பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க நீண்ட கால முதலீடே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் எதிர்பார்க்காமல், நீண்ட கால இலக்குடன் முதலீட்டை தொடங்குவது புத்திசாலித்தனம். எஸ்ஐபி முறையில் மாதாந்திர முதலீட்டை குறைந்த தொகையில் கூட தொடங்கலாம். பின்னர் படிப்படியாக இதனை உயர்த்தி கொள்ளலாம். குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு ஒரு சிறந்த முதலீடு இது என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+