நம் நாட்டில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்கின்றன. வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அசல் தொகை ஆகியவற்றை சுட்டிக்காட்டி நாம் வருமான வரி சலுகைகளை பெறலாம்.
ஆனால் இரண்டாம் முறை வீட்டுக் கடன் வாங்கினாலும் இதே சலுகைகளை பெற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்..

இந்திய வருமான வரி சட்டம் ஒரு நபருக்கு இரண்டு வீட்டுக் கடன்கள் வரை வரி சலுகைகளை வழங்குகிறது. உதாரணமாக ஒரு நபர் சென்னையில் ஒரு வீட்டுக் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கி அதில் வசித்து வருகிறார்.
அதற்காக கடனை திருப்பி செலுத்தி வரும் அவர், திருச்சியில் இரண்டாவதாக ஒரு வீட்டு கடன் வாங்கி பெற்றோருக்கு வீடு வாங்கி தந்துள்ளார். தற்போது அவர் இரண்டாவது வீட்டுக் கடனுக்கும் மாதாந்திர தவணை செலுத்தி வருகிறார். இவருக்கு முதல் வீட்டுக் கடனுக்கு கிடைத்த அனைத்து வரி சலுகைகளும், இரண்டாவது வீட்டுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவதாக அவர் கடன் பெற்று வாங்கிய வீட்டில் பெற்றோர் வசிக்கின்றனர். இதனை வருமான வரி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போது சுயமாக ஆக்கிரமிக்கப்பட்ட வீடாகவே கருதிக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். நமது வருமான வரி சட்டம் ஒரு தனிநபர் அதிகபட்சம் இரண்டு வீடுகளை சுயமாக ஆக்கிரமிக்க அனுமதிக்கிறது.
இரண்டு வீட்டு கடன்களுக்காகவும் செலுத்தும் வட்டித்தொகையை வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 (பி) இன் கீழ் மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை குறிப்பிட்டு சலுகை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக முதல் வீட்டு கடனுக்கு செலுத்திய வட்டி 1.30 லட்சம் ரூபாய், இரண்டாவது வீட்டு கடனுக்கு செலுத்திய வட்டி 1.50 லட்சம் எனில் இதில் மொத்தமாக 2 லட்சம் வரை மட்டுமே வரி விலக்குக்கு கணக்கில் கொள்ளப்படும்.
அதே போல திருப்பி செலுத்தப்படும் அசல் தொகைக்கான சலுகையை பிரிவு 80 சி இன் கீழ் சுட்டிக்காட்டி வருமான வரி சலுகை பெற முடியும். அதாவது பிரிவு 80சி-இன் கீழ் மொத்தம் 1.50 லட்சம் வரை சலுகை கோர முடியும். எனவே மொத்தமாக இரண்டு கடன்களுக்கான அசல் தொகையையும் குறிப்பிட்டு 1.50 லட்சத்திற்குள் வரி விலக்கு பெறலாம்.
ஆனால் பழைய வரிவிதிப்பைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே இந்த சலுகைகளை கோர முடியும், புதிய வரிவிதிப்பின் கீழ் இந்த வரி சலுகை எதுவும் கிடைக்காது.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications