இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.
இதில் லாபம் குறைவாக இருந்தாலும், மிக பாதுகாப்பான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு பங்கமில்லாத ஒரு முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தான் மக்கள் மத்தியில் இந்த திட்டங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்புண்டு. அந்த வகையில் அஞ்சலக திட்டங்களில் செய்யும் முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காக மாறும் என்பதனையே இதில் பார்க்கவிருக்கிறோம்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு.
இதி குறைந்தபட்சம் டெபாசிட் 1000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும்போது 10.75 வருடங்களுக்கு பிறகு உங்களது முதலீடு இருமடங்காக மாறுகின்றது.
அஞ்சலக சேமிப்பு கணக்கு
அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்பு கணக்கு போன்றது. வங்கி கணக்கில் பெரும்பாலான சேவைகளை நாம் இந்த அஞ்சல் கணக்கிலும் பெற முடியும். குறிப்பாக ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற சேவைகளையும் பெற முடியும். இந்த கணக்கின் மூலம் சேமிக்கப்படும் தொகைக்கு 4% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த கணக்கில் 18 ஆண்டுகளில் உங்களது தொகை இரட்டிப்பாகிறது.
அஞ்சலக தொடர் வைப்பு நிதி
அஞ்சலத்தில் உள்ள தொடர்ச்சியான வைப்பு நிதி திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.8% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 12.41 வருடங்களில் உங்களது முதலீடு இருமடங்காகிறது. இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகத்தில் வழங்கப்படும் இந்த மாத வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம், 6.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும். இந்த திட்டத்திலும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலகத்தில் உள்ள முக்கிய சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமும் (SCSS) ஒன்று. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.
இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
இந்த SCSS திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.4% ஆக உள்ளது. இந்த திட்டத்தில் 9.73 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இருமடங்காக மாறும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு.
இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் திட்டத்தில் 80சியின் கீழ் வரிச்சலுகை உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இதில் 10.14 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
தேசிய சேமிப்பு பத்திரம்
என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம் (National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய அரசின் திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.
இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.59 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும்.
சுகன்யா சமிரிதி யோஜனா
பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்க, பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.
இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு.
இந்த திட்டத்திற்கு தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 9.6 மாதங்களில் இரு மடங்காக மாறும்.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications