நம் நாட்டில் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் தங்களுடைய சேமிப்பில் அவசர செலவுகள் ஏற்படும் போது பாதி நிதியை பெரும்பாலானோர் எடுக்கத்தான் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு அடுத்து வரும் அவசரகால நிதியை ஏற்பாடு செய்ய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
முதலீட்டில் எந்தவித சமரசமும் செய்யாமல் எப்படி அவசரகால நிதியை உருவாக்குவது? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

எவ்வளவு தொகையை அவசர கால நிதி இலக்காக கருத்தில் கொள்ள வேண்டும்?: உங்கள் வருடாந்திர வருமானத்தில் கவனம் செலுத்துவதை விட அவசரகால நிதியை உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்த நிதியை பொறுத்தவரையில் உங்க மாத செலவுகளுடன் இவற்றை ஒப்பிடலாம். உதாரணமாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் குறைந்தது 3 மாத செலவுகளுக்கு சமமான தொகையை சேமிக்க வேண்டும். ரூ. 60,000 தொகையை வைத்துப் பார்க்கும்போது ரூ.1.8 லட்சம் வரை அவசர கால நிதியாக சேமிக்க வேண்டும். அதுவே 6 மாத செலவுகளுக்கு சேமிக்க விரும்பினால் ரூ. 3.6 லட்சம் வரையில் சேமிக்க வேண்டும். உங்கள் வருடாந்திர வருமானத்தில் இவை தோராயமாக 20 சதவீதம் மற்றும் 40% ஆகும்.
ஏற்கனவே செய்யப்படும் முதலீடுகளை நிறுத்தாமல் அவசரக்கால நிதியை உருவாக்குவது எப்படி?: உதாரணமாக நீங்கள் ஏற்கனவே மாதம் தோறும் 20,000 ரூபாய் எஸ்ஐபி முதலீடு செய்கிறீர்கள்.. அதைத் தொடர விரும்புகிறீர்கள். இதனால் தற்போதைய வருமானம் முழுமையாக செலவிடப்படுகிறது. அப்படியானால் எப்படி சேமிப்பது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம்.
அதற்கு முதலில் பயனற்ற செலவுகளை குறைக்க வேண்டும். நீங்கள் ரூ.60,000 செலவு செய்கிறீர்கள் அதில் தேவையற்ற செலவுகளை எல்லாம் கழித்தால் ரூ. 5000 முதல் ரூ.10,000 வரை சேமிக்கலாம். இவற்றோடு கூடுதலாக கிடைக்கும் நிதிகளான போனஸ், பரிசுகள், அல்லது வேறு எந்த கூடுதல் வருமானம் கிடைத்தாலும் அவற்றை அவசர கால நிதிக்காக சேமித்து வையுங்கள்.
அவற்றோடு ஏற்கனவே எஸ்ஐபி முதலீடு செய்வதை தற்காலிகமாக மாதத்திற்கு ரூ.5,000 ரூபாய் குறைத்து முதலீடு செய்யுங்கள். இதனால் மாதம் தோறும் நீங்கள் சேமிக்கும் ரூ.10,000. அவற்றோடு கூடுதலாக எஸ்ஐபி முதலீடுகளின் மூலம் சேமிக்கப்படும் தொகை ஆகியவற்றையெல்லாம் சேர்த்து அவசர கால நிதிக்கு ஒதுக்குங்கள். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சேமிப்பு கிடைத்ததும் மீண்டும் எஸ்ஐபி முதலீட்டை 20,000 ரூபாயாக தொடரலாம்.
சரி இப்படி கிடைக்கும் பணத்தை என்ன செய்வது?: இதை நீங்கள் ஸ்வீப்-இன் ஃபிக்சட் டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதிகரித்த பணப்புழக்கம் காரணமாக இதில் நல்ல வருமானமும் கிடைக்கும். அமீதுமுள்ள 70 சதவீதத்தை லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்களின் படி மூன்று மாத செலவுகளை சேர்த்து அவசரகால நிதியை உருவாக்கியவுடன் மீண்டும் சில விஷயங்களுக்காக சேமிக்க தொடங்க வேண்டும். மருத்துவச் செலவுக்கான நிதியை உருவாக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள உபகரணங்கள் பழுதடைந்து இருந்தால் அவற்றை ரிப்பேர் செய்வதற்கான செலவாக ரூ.20,000 முதல் ரூ.50,000 ரூபாயை சேமிக்க வேண்டும். இப்படி இருந்தால் அவசர காலங்களில் ஏற்படும் நிதித் தேவையை திறம்பட சமாளிக்க முடியும். இதனால் வெளியில் கடன் வாங்க வேண்டிய அவசியம் குறையும். அதோடு ஏற்கனவே செய்யும் முதலீடுகளில் இருந்து பணம் எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படாமல் இருக்கும் என்று வெல்கோ அசட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் இன் மேனேஜிங் பார்ட்னர் பிரசன்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications