கடந்த சில நாட்களாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பாதுகாப்பு மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வருவாய் ஆகியவைகளை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறினால் என்னென்ன கட்டணங்கள், வரிகள் உண்டா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது மற்ற முதலீடுகளை விட பாதுகாப்பானது மற்றும் அதிக வருவாய் தரக் கூடியது என்பதை பலர் தற்போது புரிந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மியூச்சுவல் பண்டில் ஏராளமான திட்டங்கள் இருப்பதால் அதில் எது நல்ல திட்டம் என்பதை தேர்வு செய்து முதலீடு செய்வது என்பது ஒரு சவாலான காரியமாக உள்ளது. அதனால் தான் நிதி ஆலோசகர்கள் முதலீட்டாளர்களின் வருமானம், இலக்கு மற்றும் சில விஷயங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு தகுந்த திட்டங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
திட்டம் மாற முடியுமா?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒரு திட்டத்தில் முதலீடு செய்தபின் இன்னொரு இடத்திற்கு மாற்றுவது என்பது இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு மியூச்சுவல் ஃபண்ட்டில் இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இது போன்ற மாற்றங்களை செய்வது சாத்தியம் ஆனது என்றாலும் கூட ஒரு திட்டத்திலிருந்து வெளியேறுவதாகவே கருதப்படும். ஏற்கனவே முதலீடு செய்த திட்டத்தில் இருந்து அப்படியே இன்னொரு திட்டத்திற்கு மாற முடியாது.
கட்டணம்
எனவே முதலில் திட்டத்தில் இருந்து வெளியேறும்போது வெளியேற்ற கட்டணம் விதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்திற்கு மாற்றும் போது அந்த தொகையானது நேரடியாக ஒரு புதிய திட்டத்தில் முதலீடு செய்யப்படாமல், உங்கள் வங்கி கணக்கில் உங்களுடைய முதலீடு வரவு வைக்கப்படும். அதன் பின்னர் அந்த தொகையை நீங்கள் வேறு திட்டத்தில் முதலீடு செய்து கொள்ள முடியும். இதற்கு வெளியேற்ற கட்டணம் மற்றும் கிடைத்த லாபத்தில் வரி ஆகியவை விதிக்கப்பட வாய்ப்பு உண்டு.
மாறுவது எப்படி?
உதாரணமாக நீங்கள் A என்ற திட்டத்தில் முதலீடு செய்து அதன்பின் சில மாதங்கள் கழித்து அல்லது சில வருடங்கள் கழித்து B என்ற திட்டத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் வெளியேற்ற கட்டணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். வெளியேற்ற கட்டணத்தைக் தவிர்ப்பதற்கு A திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு கால அளவை நீங்கள் நிறைவு செய்து விட்டீர்களா என்பதையும் கவனிக்கவேண்டும். மேலும் A திட்டத்தில் முதலீடு செய்ததற்கு நீங்கள் குறுகிய கால மூலதன லாப வரி அல்லது நீண்டகால மூலதன லாப வரியை செலுத்த வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். அதன் பின்னர் A திட்டத்திலிருந்து B திட்டத்திற்கு நீங்கள் மாறலாம். அவ்வாறு மாறும்போது உங்கள் யூனிட்களின் அளவு அல்லது எண்ணிக்கையை ஆன்லைன் மூலம் அல்லது நேரடியாக சென்று விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications