PF பணத்தை எடுத்து வீட்டு கடனை செலுத்தலாமா? இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன?

பெரும்பாலான இந்தியர்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்ற வங்கிகளில் வீட்டு கடன்களை தான் வாங்குகிறார்கள். இந்த வீட்டு கடனை திரும்ப செலுத்துவது என்பது பின்னாளில் பெரிய நிதி சுமையாக மாறிவிடுகிறது. எனவே முடிந்த வரை முன்பணம் செலுத்தி விரைவாக வீட்டு கடனை அடைத்து விட முயற்சி செய்கின்றனர்.

வீட்டு கடனில் அசலை குறைத்தால் கடன் வட்டி தொகையும் குறையும். எனவே வீட்டு கடன் அசலை அடைக்க , வருங்கால வைப்பு நிதி எனப்படும் PF கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தலாமா? அவ்வாறு எடுக்கும் பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PF பணத்தை எடுத்து வீட்டு கடனை செலுத்தலாமா? இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன?

நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தில் 75% வரையிலான தொகையை நாம் அவசர பண தேவைகளுக்கு எடுத்து பயன்படுத்தும் வசதி உள்ளது. அந்த வகையில் பிஎஃப் கணக்கிலிருந்து வீட்டு கடனை அடைக்க பணம் எடுக்கலாமா என்றால் எடுக்கலாம், ஈபிஎஃப்ஓ விதிமுறைகளின்படி, சந்தாதாரர்கள் தங்கள் வீட்டு கடனின் அசலை திருப்பி செலுத்த பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதி உண்டு.

பிஎஃப் தொகையை வீட்டு கடன் திருப்பி செலுத்துவதற்காக பயன்படுத்த,அந்த ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிஎஃப் பணத்தில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வீடு ஊழியரின் பெயரிலோ அல்லது அவரது மனைவியின் பெயரிலோ அல்லது இருவரின் கூட்டு பெயரிலோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுடன் இணைந்து வாங்கிய கூட்டு வீட்டு கடன்களுக்கு இந்த விதி பொருந்தாது.

பிஎஃப் விதிகளின்படி, வீட்டு கடன் திருப்பி செலுத்துவதற்காக ஒருவர் தனது பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே பெற முடியும். அனைத்து வேலைவாய்ப்புகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்கு பிறகு பிஎஃப் தொகையை வீட்டு கடன் நோக்கத்திற்காக நீங்கள் எடுத்தால், அந்த தொகை முற்றிலும் வரி விலக்கு பெற்றதாகும். இதன் மீது எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை மற்றும் TDS பிடிக்கப்படாது.

Also Read

உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்திற்கு 8.25% வட்டி கிடைக்கிறது. இது காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைகிறது. உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதம் இதை விட அதிகமாக இருந்தால், முன்கூட்டியே பிஎஃப் மூலம் கடனை அடைப்பது கணிசமான வட்டி சுமையை குறைக்கும். கடன் தொகை, கடன் திரும்ப செலுத்தும் காலம், ஈஎம்ஐ அகியவை குறையும்.

Recommended For You

ஆனால் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுப்பது உங்களது ஓய்வூதிய காலத்திற்கான ஒட்டுமொத்த சேமிப்பை குறைத்துவிடும் காம்பவுண்டிங் பலனையும் தராது. எனவே, உங்களது அவசர தேவைகளையும் ஓய்வூதிய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பிஎஃப் பணத்தை எடுக்கும் முடிவினை எடுக்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+