பொதுத்துறை வங்கியான கனரா வங்கியானது அதன் பலவகையான டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இது குறித்து இவ்வங்கியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பானது ஜனவரி 13, 2023ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கனரா வங்கி வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்னென்ன கட்டணம் அதிகரிப்பு?
குறிப்பாக இந்த கட்டண அதிகரிப்பானது வருடாந்திர கட்டணம், கார்டு மாற்றம், டெபிட் கார்டை இன் ஆக்டிவாக வைத்திருந்தால் அதற்கு கட்டணம், எஸ் எம் எஸ் அலர்ட்டுக்கு கட்டணம் என விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் வரி சேர்க்கப்படாமல் உள்ளது. ஆக கீழ் கண்ட கட்டணங்களுடன் கூடுதலாக வரி விகிதமும் வசூலிக்கப்படலாம்.
டெபிட் கார்டு வருடாந்திர கட்டணம்
கிளாசிக் அல்லது ஸ்டாண்டர்ட் டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் என்பது 125 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்டினம் மற்றும் வணிக கார்டுகளுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 300 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே தேர்தெடுக்கப்பட்ட சில வகையான கார்டுகளுக்கு 1000 ரூபாய் ஆண்டு கட்டணமாகவும் விதிக்கப்படுகின்றது.
டெபிட் கார்டை மாற்ற கட்டணங்கள்
உங்களது டெபிட் கார்டுகளை மாற்ற கட்டணங்கள் அதிகரிக்கபப்ட்டுள்ளது. இது கிளாசிக் மற்றும் ஸ்டாண்டர்ட் கார்டுகளுக்கு கட்டணம் இதுவரையில் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனி 150 ரூபாய் வசூலிக்கப்படும். இதே பிளாட்டினம் மற்றும் வணிக கார்டுகள் மற்றும் செலக்டிவ் கார்களுக்கு, 50 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன் ஆக்டிவ் கட்டணம்?
பொதுவாக பலருக்கும் இந்த பழக்கம் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கினை தொடங்கி வைத்துக் கொண்டு, கார்டினை பல வருடம் பயன்படுத்தாமல் இன் ஆக்டிவ்வாக வைத்திருப்பர். ஆக அதுபோன்று இந்த இன் ஆக்டிவ் கார்டினை வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் விதிகப்படும். இது தற்போதைக்கு இன் ஆக்டிவ்வாக வைத்திருக்கும் பிசினஸ் டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்படும். இதற்கு வருடத்திற்கு 300 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படலாம். மற்ற கார்டுகளுக்கு இதுவரையில் கட்டணம் விதிகப்பட்டதாக தெரியவில்லை.
டெபிட் கார்டு எஸ் எம் எஸ் கட்டணம்
கனரா வங்கியில் தற்போது எஸ் எம் எஸ் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு காலாண்டுக்கும் 15 ரூபாய் விதிக்கப்படுகின்றது. இதன் புதிய கட்டணங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications