பொதுவாக முதலீடு என்றாலே நம்மவர்கள் மத்தியில் முதலில் கூறப்படுவது வங்கி வைப்பு நிதிகள் தான். என்னதான் சந்தையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்தாலும், சந்தை அபாயம் என்பது இல்லாமல், நிரந்தரமாக லாபம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆக சாமானியர்கள் தொட ங்கி மூத்த குடிமக்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் ஒரு திட்டமாகவும் உள்ளது.
அந்த வகையில் பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கி, அதன் 2 கோடி ரூபாய் வரையிலான பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இந்த புதிய வட்டி விகிதமானது ஏப்ரல் 5, 2023 ஆன இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வட்டி விகிதமானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இவங்கியில் அதிகபட்சமாக 444 நாட்களுக்கான டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.90 சதவீதமாக வட்டி கிடைக்கிறது.
கனரா வங்கியின் இந்த முடிவானது ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில் வந்துள்ளது. ஏப்ரல் 3, 5 மற்றும் 6ம் தேதிகள் நடக்கவுள்ள மானிட்டரி பாலிசி கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான முக்கிய அறிவிப்பானது ஏப்ரல் 6, 2023 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதத்தில் பொது மக்களுக்கு வட்டி விகிதம் என்பது 4% முதல் 7.25% ஆக இருந்தது. இதே மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% ஆக வட்டியினை பெறுவார்கள்.
பொது மக்களுக்கு வட்டி விகிதம்
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 4%
- 46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 5.25%
- 91 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 5.5%
- 180 நாள் முதல் 269 நாட்கள் வரையில் - 6.25%
- 270 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 6.5%
- 1 வருடம் - 7%
- 444 நாட்கள் - 7.25%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 6.9%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 6.85%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 6.8%
- 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு மேல் - 6.7%
மூத்த குடிமக்கள் திட்டம்
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 4%
- 46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 5.25%
- 91 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 5.5%
- 180 நாள் முதல் 269 நாட்கள் வரையில் - 6.75%
- 270 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 7%
- 1 வருடம் - 7.5%
- 444 நாட்கள் - 7.75%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 7.4%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 7.35%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 7.3%
- 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு மேல் - 7.2%
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications