இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிகாக ரிசரவ் வங்கி கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்திலும் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காமல் இருந்தது.
இதைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி, யூகோ உட்படப் பல வங்கிகள் தனது வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில் கனரா வங்கியும் சேர்ந்துள்ளது.
கனரா வங்கி
கனரா வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை கொண்ட வைப்பு நிதிக்கு வட்டி விகிதத்தைப் புதுப்பித்துள்ளது. இதன் மூலம் சில வைப்பு நிதி திட்டத்திற்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க உள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதம் அனைத்தும் மார்ச் 1, 2022 முதல் நடைமுறை செய்யப்பட உள்ளது.
வைப்பு நிதி வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.9 சதவீதம்
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3.9 சதவீதம்
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.95 சதவீதம்
180 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4 சதவீதம்
1 வருடம் மட்டுமே - 5.1 சதவீதம்
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்களுக்குள் - 5.15 சதவீதம்
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்குள் - 5.2 சதவீதம்
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 5 ஆண்டுகளுக்குள் - 5.45 சதவீதம்
கனரா வங்கியின் தனித்துவமான 1111 நாட்கள் வைப்பு நிதி திட்டம் - 5.55 சதவீதம்
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் - 5.5 சதவீதம்
மூத்த குடிமக்கள் வைப்பு நிதி திட்டம்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.9 சதவீதம்
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3.9 சதவீதம்
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.95 சதவீதம்
180 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.9 சதவீதம்
1 வருடம் மட்டுமே - 5.6 சதவீதம்
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்களுக்குள் - 5.65 சதவீதம்
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்குள் - 5.7 சதவீதம்
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 5 ஆண்டுகளுக்குள் - 5.95 சதவீதம்
கனரா வங்கியின் தனித்துவமான 1111 நாட்கள் வைப்பு நிதி திட்டம் - 6.05 சதவீதம்
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் - 6 சதவீதம்
சேமிப்பு கணக்கு
கனரா வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகை அடிப்படையில் வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்குக் காலாண்டு அடிப்படையில் வட்டி வருமானத்தை வைப்பு வைக்கப்படும்.
50 லட்சத்திற்கும் குறைவாக - 2.90 சதவீதம்
50 லட்சம் முதல் 100 கோடி ரூபாய் - 2.90 சதவீதம்
100 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை - 3.05 சதவீதம்
300 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை - 3.05 சதவீதம்
500 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை - 3.35 சதவீதம்
1000 கோடி ரூபாய்க்கு மேல் - 3.50 சதவீதம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications