பொதுத்துறை வங்கியான கனரா வங்கி FD விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. அதன்படி புதிய கட்டணங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 3 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கான வட்டியில் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது.
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வைக்கப்படும் எஃப்டிகளுக்கு வட்டி விகிதம் 4 சதவீதம் முதல் 6.70 சதவீதம் வரை இருக்கும். அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை 7.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கு, மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது 0.5 சதவீதம் அதிகமாகும்.

இது 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் எஃப்டி டெபாசிட்டுகளுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
46 முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்டி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான எஃப்டி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டி டெபாசிட்டுகளுக்கு 6.15 சதவீத வட்டி கிடைக்கும்.
270 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான கால எஃப்டி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
ஒரு வருட கால எஃப்டி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.85 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
மேலும் 444 நாட்கள் சிறப்பு வைப்புத் திட்டத்தில் 7.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 6.85 சதவீத வட்டி கிடைக்கும்.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் டெபாசிட் செய்வதற்கான வட்டி விகிதம் 7.30 சதவீதம் வட்டி கிடைக்கும்.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால வைப்புத்தொகைக்கான வட்டி 7.40 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் டெபாசிட் செய்வதற்கான வட்டி விகிதம் 6.70 சதவீதம் வட்டி கிடைக்கும்.
அதேபோல், மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் வரை கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கும். பிரிவு 80C வரி செலுத்துவோர் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கும் வரிவிலக்கு உண்டு. இருப்பினும், அதிக வட்டி விகிதங்களின் பலன் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், வங்கிகளும் FD விகிதங்களைக் குறைக்கும். எனவே அதிக வட்டி வருமானம் பெற விரும்புபவர்கள் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு முன் FD செய்தால் பலன் பெறலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications