இன்றைய காலகட்டத்திலும் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், ரிஸ்க் இல்லாத முதன்மையான முக்கிய முதலீடு என்றால், அது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். ஏனெனில் முதலீட்டுக்கு பங்கம் இல்லாத ஒரு பாதுகாப்பான முதலீடாகும்.
அதிலும் நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி பல முறை வட்டி குறைப்பினை செய்த நிலையில், கடந்த இரு முறைகளாக வட்டியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதன் காரணமாக வங்கிகள் கடன்களுக்கான அடிப்படை விகிதம் மற்றும் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினையும் மாற்றம் செய்யவில்லை.
வட்டி விகிதம் அதிகரிப்பு
அதிலும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மிகக் குறைவாக உள்ளன. இதனால் தற்போதைய காலகட்டத்தில் பிக்ஸட் டெபாசிட் என்பது ஒரு ஆர்வமில்லாத முதலீடாக இருந்து வருகிறது. எனினும் கனரா வங்கி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தினை தற்போது கனரா வங்கி அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பயன்
இந்த வட்டி விகிதம் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை மாற்றியமைக்காத நிலையிலும் கூட, இந்த வட்டி அதிகரிப்பு வந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
பொது மக்களுக்கான வட்டி
பொது மக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி ரூபாய்க்குள்) பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வரவுள்ளது.
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.95%
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.9%
- 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
- 180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.45%
- 1 வருடத்திற்கு மட்டும் - 5.20%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.2%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.4%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.5%
- 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 5.5%
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம்
மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம் (ரூ.2 கோடி ரூபாய்க்குள்)
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.95%
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.9%
- 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
- 180 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.95%
- 1 வருடத்திற்கு மட்டும் - 5.50%
- 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.70%
- 2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.90%
- 3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 6%
- 5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு - 6%
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications