இந்தியாவில் இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான மாதம். ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட வேண்டும். வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட்ட சில விஷயங்களை நாம் சரியாக செய்தாலே அரசுக்கு நாம் பணம் செலுத்த வேண்டாம் அரசாங்கமே நமக்கு பணம் செலுத்தும்.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அண்மைக்காலமாக மேலோங்கி இருக்கிறது அந்த வகையில் தற்போது இந்திய சாலைகள் எங்கும் கார்கள் நிறைந்து காணப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இவ்வாறு கார் வாங்க கூடியவர்களுக்கு சில சலுகைகளை அரசு வழங்குகிறது. அப்படி ஒரு வருமான வரி சம்பந்தப்பட்ட சலுகை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய ஆண்டில் நீங்கள் புதிதாக கார் வாங்கி இருந்தால் அரசே உங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கும். புதிதாக கார் வாங்கும் போது அதில் 1% நம்மிடம் இருந்து டிசிஎஸ் எனப்படும் TCS (tax collected at source ) என்ற முறையில் பிடித்தம் செய்து கொள்வார்கள். கார் விற்பனை செய்யும் நிறுவனமே இந்த பணத்தை பிடித்தம் செய்து வருமான வரி துறையிடம் வழங்கிவிடும்.
உதாரணமாக நீங்கள் கார் வாங்குகிறீர்கள், அதன் தொகை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் உங்களுக்கு காரை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் வருமான வரி சட்டத்தின் பிரிவு 206Cஇன் கீழ் காரின் விலையில் 1% தொகையை டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறையிடம் வழங்கிவிடும். அதாவது உங்களின் பான் எண்ணை குறிப்பிட்டு டெபாசிட் செய்வார்கள்.

அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் , வரி ஏய்ப்புகளை தடுக்க வேண்டும் , சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட கார்களுக்கு டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் காரின் விலை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது எனும் போது அதில் 1 சதவீதம் தொகை (10,000 ரூபாய்) டிசிஎஸ் ஆக பிடித்தம் செய்ய வேண்டும்.
இது அரசு நிறுவனங்கள் ,தூதரகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சில பொது துறையின் நிறுவனங்களுக்காக வாங்கும் கார்களுக்கு பொருந்தாது . தனிநபர் தன் தனிப்பட்ட தேவைக்காக கார் வாங்கி இருந்தால் செல்லும். ஒரு சாமானிய மக்கள் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட ஒரு காரை வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து 1% தொகை அதாவது 10,000 ரூபாய் டிசிஎஸ் ஆக பிடித்தம் செய்யப்படும். இது உங்கள் காருக்கான பில்லில் சேர்த்திருப்பார்கள்.
இதுவே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் என்றால் 15,000 ரூபாய் பிடிக்கப்படும். எனவே இந்த ஆண்டில் நீங்கள் புதிதாக கார் வாங்கி இருக்கிறீர்கள் அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது அதனை குறிப்பிடுங்கள். அப்போது தான் அந்த டிசிஎஸ் தொகை உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
இந்த தொகையை டேக்ஸ் ரீஃபண்டாக பெறலாம் அல்லது நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டி இருந்தால் அதில் பிடித்தம் செய்து கொள்வார்கள். நீங்கள் கார் வாங்கும் போது உங்களுடைய டீலரிடம் படிவம் 27D என்பதை கேட்டு பெற வேண்டும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது படிவம் முழு ஆண்டு அறிக்கையை சோதித்துப் பார்க்க வேண்டும். அதில் இந்த டிசிஎஸ் விவரம் பெற்று இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது இருக்கும் பட்சத்தில் அந்த டிசிஎஸ் தொகையை நீங்கள் ரீஃபண்ட் கோரி வருமானவரித்துறை இடம் விண்ணப்பம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications

