குறைந்த வட்டியில் கார் லோன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவு..!

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கார் லோன் பெறுவது மிக எளிதான விஷயமே. சொல்லப்போனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் பல சலுகைகளை வழங்குகின்றன.

எனினும் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எங்கு வட்டி குறைவு? செயல்பாட்டு கட்டணம் என்ன என்பதை பலரும் அறிவதில்லை.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது சில முன்னணி வங்கிகளில் எவ்வளவு வட்டி? செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பது தான்.

கார் லோன்

கார் லோன்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான கடன்களையும் ஆன்லைனிலேயே அப்ளை செய்யும் வசதி உள்ளது. ஆக நீங்கள் இதற்காக வங்கிகளை தேடி அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மற்ற கட்டணங்கள் எவ்வளவு? ஏதேனும் சலுகைகள் உண்டா? என்னென்ன ஆவணங்கள் தேவை என பார்த்துக் கொண்டு, இணையத்தில் பதிவு செய்தால், வங்கியாளர்களே வீடு தேடி வந்து ஆவணங்களை வாங்கி செல்கின்றனர். அந்தளவுக்கு எளிமையாகி விட்டது.

ஹெச்டிஎஃப்சி வங்கி & எஸ்பிஐ

ஹெச்டிஎஃப்சி வங்கி & எஸ்பிஐ

ஹெச்டிஎஃப்சி வங்கியில் கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.65% (fixed) ஆகும். லோன் கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையிலேயே 100% கடனை பெறலாம்.

இதே எஸ்பிஐயில் வாகனத்தின் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். வட்டி விகிதம் வருடத்திற்கு 7.70%(floating) ஆகும்.

 

ஐசிஐசிஐ வங்கி & ஆக்ஸிஸ் வங்கி

ஐசிஐசிஐ வங்கி & ஆக்ஸிஸ் வங்கி

இதே ஐசிஐசிஐ வங்கியில் 7.90% (fixed) வட்டி விகிதமாகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையிலேயே 100% கடனை பெறலாம்.

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் 8.70%(fixed) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். வாகனத்தின் ஆன் தி ரோடு மதிப்பில் 100% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

இந்தஸிந்த் வங்கி & கோடக் மகேந்திரா வங்கி

இந்தஸிந்த் வங்கி & கோடக் மகேந்திரா வங்கி

இந்தஸிந்த் வங்கியில் வட்டி விகிதம் 8.65%(fixed) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையிலேயே 85% வரை கடனாக பெறலாம்.

கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி விகிதம் 6.50% (fixed) ஆகும். இந்த வங்கியில் கடனுக்கான கால அவகாசம் 5 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையிலேயே 90% வரை கடனாக பெறலாம்.

 

பஞ்சாப் நேஷனல் வங்கி & யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி & யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.55% (floating) வட்டி விகிதமாகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். வாகனத்தின் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.40% (floating) வட்டி விகிதமாகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். வாகனத்தின் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

ஆந்திரா வங்கி & சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

ஆந்திரா வங்கி & சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.25% (floating) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 90% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

ஆந்திரா வங்கியில் வட்டி விகிதம் 7.40% (fixed) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

ஐடிபிஐ வங்கி & ஃபெடரல் வங்கி

ஐடிபிஐ வங்கி & ஃபெடரல் வங்கி

ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதம் 9.20% (fixed) ஆகும். இந்த வங்கியில் கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையில் 90% வரை கடனாக பெறலாம்.

ஃபெடரல் வங்கியில் வட்டி விகிதம் 8.50% (fixed) ஆகும். இந்த வங்கியில் கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையில் 90% வரை கடனாக பெறலாம்.

 

பேங்க் ஆப் மஹாராஷ்டிரா & கார்ப்பரேஷன் வங்கி

பேங்க் ஆப் மஹாராஷ்டிரா & கார்ப்பரேஷன் வங்கி

பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் வட்டி விகிதம் 7.55% (floating) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

கார்ப்பரேஷன் வங்கியில் வட்டி விகிதம் 7.40% (floating) ஆகும். இந்த வங்கியில் கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையில் 85% வரை கடனாக பெறலாம்.

 

இந்தியன் வங்கி & பேங்க் ஆப் பரோடா

இந்தியன் வங்கி & பேங்க் ஆப் பரோடா

இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் 9.65% (floating) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் 7.35% (floating) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 90% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

பேங்க் ஆப் இந்தியா & யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா & யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.45% (floating) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 8.60% (floating) ஆகும். கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் ஆன் தி ரோடு மதிப்பில் 85% வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+