நம் நாட்டவர்கள் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கிரெடிட் கார்டு போலவே பயன்படுத்தக்கூடிய சார்ஜ் கார்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அது என்னப்பா சார்ஜ் கார்டு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?, அது வேற ஒன்னும் இல்லைங்க, முதல்ல சொன்ன மாதிரி அது கிரெடிட் கார்டு மாதிரிதான் ஆனால் அது இல்லை. அட என்னப்பா குழப்புறீங்க என்கிறீர்களா?. கிரெடிட் கார்டுடன் ஒப்பிட்டு சொன்னால் சார்ஜ் கார்டுன்னா என்ன என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

உச்ச வரம்பு
கிரெடிட் கார்டில் இவ்வளவுதான் செலவு செய்யலாம் என்ற முன்கூட்டிய கடன் வரம்பு உண்டு. அந்த வரம்பை தாண்டி செலவு செய்ய முடியாது மேலும் கடன் வரம்பை உயர்த்த வேண்டுமானால் நிதி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், சார்ஜ் கார்டில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நிலையான கடன் உச்ச வரம்பு கிடையாது. அதனால் தாராளமாக செலவு செய்யலாம். இருப்பினும், வழங்குபவர் சில சந்தர்ப்பங்களில் வரம்புகளை விதிக்கலாம். அதேசமயம், சார்ஜ் கார்டு வாயிலாக செய்யப்படும் செலவுகள் கண்காணிக்கப்படுகிறது.
மாதாந்திர பில்
கிரெடிட் கார்டு மாதாந்திர பில் வரும்போது, நீங்கள் அதில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தலாம். பாக்கி தொகை அடுத்த மாத பில்லுக்கு சென்று விடும். ஆனால் சார்ஜ் கார்டில் மாதாந்திர பாக்கி தொகையை கட்டாயம் முழுமையாக செலுத்த வேண்டும். பாக்கியுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் முழுமையாக செலுத்தப்பட வேண்டும், எந்தவொரு பாக்கி தொகையையும் அடுத்த மாதத்துக்கு எடுத்து செல்ல முடியாது.
வட்டி
கிரெடிட் கார்டில் பாக்கி தொகைக்கு வங்கிகள் நிதி கட்டணங்களையும், வட்டியையும் விதிக்கிறது. ஆனால் சாாஜ் கார்டில் வட்டி விதிக்கப்படுவதில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் நிலுவை தொகையை செலுத்த தவறினால், பாக்கியுள்ள தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணமாக விதிக்கப்படுகிறது. மேலும் உங்கள் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.
ஆண்டு கட்டணம்
மற்ற கார்டுகளை காட்டிலும் சார்ஜ் கார்டில் சார்ஜ் கார்டுகளுக்கான ஆண்டு சேவை கட்டணம் மிக அதிகம். ஆனால், விரிவான வெகுமதிகள்,பயண சலுகைகள் மற்றும் வரவேற்பு சேவைகள் கிடைக்கும்.
கடன் முகமைக்கு தகவல்
கிரெடிட் கார்டு போன்றே சார்ஜ் கார்டிலும் நீங்கள் பாக்கி தொகையை செலுத்தவில்லை என்றால் அந்த தகவல் சிஆர்ஐஎஃப் போன்ற கிரெடிட் முகமைக்கு சார்ஜ் கார்டு வழங்கிய நிறுவனம் தெரிவிக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் தகுதியை பாதிக்கும். மேலும் எதிர்காலத்தில் கிரெடிட் கார்டு அல்லது கடனை பெறுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
யாருக்கு சாியானது
ஒவ்வொரு மாதமும் தங்கள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தக்கூடிய, அதிக வருமானம் கொண்ட தனிநபர்கள், ஒழுக்கமான செலவு பழக்கம் கொண்ட நபர்கள் சார்ஜ் கார்டை வாங்கி தாராளமாக பயன்படுத்தலாம். வாடிக்கையாளரின் பணபரிவர்த்தனை வரலாறு மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை பொறுத்து சார்ஜ் கார்டு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சார்ஜ் கார்டு
கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சார்ஜ் கார்டுக்கான சந்தை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் சார்ஜ் கார்டு வழங்கும் ஒரே நிதி நிறுவனம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ். இந்நிறுவனம் நம் நாட்டில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்டு கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் கார்டு என 2 விதமான கார்டுகளை வழங்குகிறது. ரூ.6 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் கொண்ட தனிநபர்கள் கோல்டு கார்டு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் கொண்டவர்கள் பிளாட்டினம் கார்டு வாங்கலாம்.
Story written by: Subramanian
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications