இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் உபயோகிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில் வங்கி செல்லாமல் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் உங்களால் பணத்தினை எடுத்துக் கொள்ள முடியும்
அதிலும் வங்கி விடுமுறை நாட்களில் கூட பணத்தினை எடுத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாக ஏடிஎம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகளவில் இருந்தாலும் கூட, ஏடிஎம் சேவைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
கட்டணம் உண்டு
இந்த நிலையில் அவ்வப்போது புதிய ஏடிஎம் விதிகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஏடிஎம் பரிவர்த்னை செய்யும்போது நமது வங்கிக் கணக்கில் பணம், இல்லாமல் தோல்வியுற்றால் அதற்கும் நமது வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக இதனை தவிர்க்க வேண்டுமெனில், உங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, பின்னர் பரிவர்த்தனை செய்யலாம்.
இருப்பினை எப்படி தெரிந்து கொள்வது?
இதற்காக வங்கிகள் பல ஆப்சன்களை கொண்டுள்ளன. ஆக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுக்கலாம். அல்லது மெசேஜ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். ஆனால் பல வாடிக்கையாளர்களும் இதனை அறியாமல் ஏடிஎம்களில் சென்று பரிமாற்றம் செய்ய நினைக்கின்றனர். இதனால் பின்னர் கட்டணங்களை செலுத்துகின்றனர். ஆக இனியாவது ஏடிஎம் போகும் முன்பு சரியான இருப்பு தொகையினை தெரிந்து கொண்டு, பின்பு பணம் எடுக்கலாம்.
எஸ்பிஐ-யில் எவ்வளவு கட்டணம்?
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ-யில், வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றால் அதற்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனுடன் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இந்த கட்டணம் குறைவு தான்.
மற்ற வங்கிகளில் எவ்வளவு கட்டணம்?
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட சில வங்கிகளும், போதிய இருப்பு இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றால் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றன. இந்த வங்கிகளிலும் இலவசமான உங்களது கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, பல வசதிகள் உள்ளன. ஆக ஏடிஎம் போகும் முன் இவற்றை கவனித்துக் கொண்டு செல்வது நல்லது.
எப்படி கட்டணங்களை தவிர்ப்பது?
பல வங்கிகளும் பேலன்ஸினை தெரிந்து கொள்ள எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆக உங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என தெரியாவிட்டால், முதலில் அதனை தெரிந்து கொண்டும், பின்னர் பரிவர்த்தனை செய்யலாம். அல்லது உங்களது யுபிஐ கணக்கின் மூலமாக கூட பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம். அப்படி இதெல்லாம் செய்யாவிட்டாலும் கூட, ஏடிஎம்மிலேயே எவ்வளவு இருப்பு உள்ளது என தெரிந்து கொண்டு, அதன் பிறகு பரிவர்த்தனையை தொடரலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications