கடந்த சில ஆண்டுகளாகத் தான் பான் மற்றும் ஆதார் தொடர்பான சில குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் விதத்தில், கடந்த 2018-ம் ஆண்டு பான் அட்டை உடன், ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.
அன்றில் இருந்து இன்று வரை ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
இப்போது, ஆதார் மற்றும் பான் இணைப்பு செய்யாதவர்களின், பான் அட்டையின் ஸ்டேட்டஸிலேயே வருமான வரித் துறையினர் கை வைக்கும் அளவுக்கு பெரிய பஞ்சாயத்தாக உருவெடுத்து இருக்கிறது.
எதை பார்க்க இருக்கிறோம்
ஒருவருக்கு ஒரு பான் அட்டை கொடுத்து இருக்கிறார்கள் என்றால், அவரின் பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்க வேண்டும். இந்த பான் ஸ்டேட்டஸை எப்படி பார்ப்பது என்பதை முதலில் பார்த்து விடுவோம். அதன் பின் பான் ஸ்டேட்டஸ் ஆக்டிவ்வாக இல்லை என்றால் என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என பார்ப்போம்.
எப்படி பார்ப்பது
ஸ்டெப் 1: https://www.incometaxindiaefiling.gov.in/home வலைதளத்துக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: இடது பக்கம் Quick Links-ன் கீழ் Verify Your PAN Details என்கிற வார்த்தையை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: Verify Your PAN Details க்ளிக் செய்த உடன் நம் பான் எண், பான் அட்டையில் இருக்கும் நம் முழு பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்கும். கடைசியாக கேப்சாவையும் கேட்கும். எல்லாவற்றையும் சரியாகக் கொடுங்கள்.
ஆக்டிவ் தானா?
ஸ்டெப் 4: இவைகளை எல்லாம் சரியாகக் கொடுத்த பின் Submit கொடுத்தால் அடுத்த சில நொடிகளில் PAN is Active என்று வந்தாலோ அல்லது PAN is active but the details are not matching with PAN database என்று வந்தாலோ நம் பான் அட்டை ஆக்டிவ்வாக இருப்பதாக அர்த்தம்.
இணைப்பு
இப்போது மத்திய அரசு, இந்த பான் எண்ணை, நம்முடைய ஆதார் எண்ணுடன் இணைத்தே ஆக வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. இப்படி ஆதாரை பான் அட்டை உடன் இணைக்க டிசம்பர் 31, 2019 வரை கெடு விதித்து இருந்தார்கள். அந்த கெடுவை நீட்டித்து தற்போது மார்ச் 31, 2020 வரை நேரம் கொடுத்து இருக்கிறார்கள்.
என்ன ஆகும்
இப்போது ஒருவேளை நாம் எல்லாம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்..? என்கிற கேள்வி எழுகிறதா. சிம்பிள் நம் பான் அட்டை Inoperative அட்டைகள் பட்டியலில் சேர்க்கப்படும். அதாவது நம் பான் அட்டை செயல் இழந்து விடும். இந்த பான் அட்டை செயல் இழந்தால் என்ன ஆகும்..?
விளைவுகள்
ஒருவரின் பான் அட்டை செயல் இழந்துவிட்டால், அவர் பான் அட்டையைக் கொடுக்காமல் இருந்த தவறுக்காக, வருமான வரிச் சட்டத்தின் படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுமாம். விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பான் அட்டை செயல் இழந்த பின், அந்த பான் அட்டையை வைத்து செய்த பரிவர்த்தனைகளைக் கூட பான் அட்டை கொடுக்காமல் செய்ததாகவே வருமான வரித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என ஆடிட்டர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
தேவை
பான் அட்டையை, வங்கிக் கணக்கு தொடங்க, வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் போட, நிலம் மற்றும் வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்கும் போது எல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டும். நம் பான் அட்டை செயல் இழந்து விட்டால், அது செல்லாததாகிறது. அதற்கு மேல் நம் பான் அட்டையைக் கொடுத்து இந்த பரிமாற்றங்களைச் செய்ய முடியாது.
வருமான வரிச் சட்டம்
இதே போல, பான் அட்டையை கொடுத்துச் செய்ய வேண்டிய பல பரிவர்த்தனைகளையும், நம் பான் செயல் இழந்துவிட்டால் செய்ய முடியாது. அதையும் மீறி செயல் இழந்த பான் அட்டையை வைத்து பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், வருமான வரித் துறை, செல்லாத பான் அட்டை கொடுக்காததற்கு நம் மீது நடவடிக்கை எடுக்கும். எனவே மக்களே, தயவு செய்து பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். உங்கள் பான் அட்டை ஸ்டேட்டஸை ஆக்டிவ்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications