உங்க குழந்தையின் கல்வி செலவுக்கு எப்படி பணம் சேர்ப்பது? இந்த ஒரு விஷயத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பெற்றோரின் மிகப்பெரிய கனவு தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான். நல்ல கல்வி கிடைத்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால் தான் பெற்றோர் கடினமாக உழைக்கிறார்கள். இப்படி பிள்ளைகளின் கல்வி செலவுக்காக திட்டமிடும் பெற்றோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

இந்தியாவில் பணவீக்கம் பொதுவாக 6% வரை இருக்கும். ஆனால், கல்வித்துறை சார்ந்த பணவீக்கம் ஆண்டுக்கு 8% முதல் 12% வரை உயர்கிறது. அதாவது இன்று ஒரு பட்டப்படிப்புக்கு 20 லட்சம் ரூபாய் செலவாகிறது என்றால், ஆண்டுக்கு 10% கல்வி கட்டண உயர்வு விகிதத்தை கணக்கிட்டால், சரியாக 15 ஆண்டுகளுக்கு பிறகு அதே படிப்பிற்கான செலவு சுமார் 83 லட்சம் ரூபாயாக உயரும்.

உங்க குழந்தையின் கல்வி செலவுக்கு எப்படி பணம் சேர்ப்பது? இந்த ஒரு விஷயத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

எனவே குழந்தைகளின் கல்விக்காக பணம் முதலீடு செய்ய திட்டமிடும் பெற்றோர் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் திட்டமிட வேண்டும். எனவே சாதாரண சேமிப்பு கணக்குகள் அல்லது ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதால் மட்டுமே எதிர்கால கல்வி தேவையை சமாளிக்க முடியாது. நம் முதலீடு பணவீக்கத்தை மிஞ்சிய லாபத்தை தரும் வகையில் இருக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Also Read

எனவே குழந்தையின் தற்போதைய வயது மற்றும் கல்லூரி தொடங்கும் வயதை கணக்கிட்டு, உங்களிடம் உள்ள கால அவகாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்து 3 ஆண்டுகள் ஆகிறது என்றால், கல்லூரிக்கு செல்ல 15 ஆண்டுகள் உள்ளன. நீண்ட கால இலக்கு என்பதால், பணவீக்கத்தை வென்று பெரிய அளவில் லாபம் ஈட்டக்கூடிய முதலீட்டு வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் சிறுக சிறுக தான் பணத்தை சேமிக்க வேண்டும். SIP முறையில் பணத்தை முதலீடு செய்து கொண்டே வந்தால் நிச்சயம் எதிர்பார்க்கும் நிதி இலக்கை எட்டலாம் என்கின்றனர்.

Recommended For You

இயன்றவரை முதலீட்டை சீக்கிரமாக தொடங்க வேண்டும். அப்போது காம்பவுண்டிங் மூலம் நம் சிறிய முதலீடு பெரிய பணமாக உருவெடுக்கும். எனவே உங்கள் குழந்தையின் வயது , இன்னும் எத்தனை ஆண்டுகளில் அவர் கல்லூரி செல்ல போகிறார் என்பதை எல்லாம் கணக்கிட்டு முதலீட்டை தொடங்கி விடுவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே மேலே கூறிய உதாரணத்தின் படி உங்கள் குழந்தைக்கு 3 வயதாகிறது, கல்லூரிக்கு செல்ல 15 ஆண்டுகள் இருக்கிறது என்றால் மாதம் தோறும் 18,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும், அந்த முதலீடு 12% லாபம் தருவதாக இருந்தால் 15 ஆண்டுகளீல் உங்களின் மொத்த முதலீடு32.40 லட்சம் ரூபாயாகவும் கிடைக்கும் மொத்த பணம் 85 லட்சம் ரூபாயாகவும் இருக்கும்.குழந்தையின் கல்வி என்பது விலைமதிப்பற்றது. இதற்கு பணத்தை சேமிப்பது நல்லது தான், ஆனால் அதனை சரியான முறையில் செய்தால் சிறு முதலீட்டிலேயே பெரிய லாபத்தை பார்க்க முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+