குழந்தைகள் எதிர்காலத்துக்காக பணம் சேர்க்கிறீங்களா? இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் பெஸ்ட் சாய்ஸ்!!

குழந்தைகளுக்கான பரஸ்பர நிதி திட்டங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் 160% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கல்விக்கான நீண்டகால நிதி இலக்குகளே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். நிபுணர்களின் கருத்துப்படி, இத்திட்டங்களின் லாக்-இன் அம்சம் முதலீட்டு ஒழுக்கத்தை அளித்து, சந்தை ஏற்ற இறக்கங்களின் போதும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து நிலைத்திறுக்க உதவுகிறது.

ஐசிஆர்ஏ அனலட்டிக்ஸ் தகவல்களின்படி, குழந்தைகளுக்கான பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர் ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2020 நவம்பரில் ரூ9,800 கோடியாக இருந்த இந்த நிதிகளின் மொத்த நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (AUM), 2025 நவம்பர் முடிவில் ரூ26,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஃபோலியோக்களின் எண்ணிக்கையும் 32 லட்சமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகள் எதிர்காலத்துக்காக பணம் சேர்க்கிறீங்களா? இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் பெஸ்ட் சாய்ஸ்!!

குழந்தைகளுக்கான பரஸ்பர நிதித் திட்டங்கள், ஓய்வூதிய நிதிகளுடன் சேர்ந்து தீர்வு சார்ந்த நிதிப் பிரிவின் கீழ் வருகின்றன. சொத்து மதிப்பில் இவ்வளவு பெரிய வளர்ச்சி இருந்தபோதிலும், திட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆக இருந்த திட்டங்கள், தற்போது 12 ஆக உயர்ந்துள்ளன. FinFix Research மற்றும் Analytics நிறுவனத்தின் நிறுவனர் பிரப்லீன் பஜ்பாய், பெரும்பாலான வளர்ச்சி ஏற்கனவே உள்ள திட்டங்கள் மூலமே வந்தது எனக் குறிப்பிட்டார்.

பஜ்பாய் கூறுகையில், "கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டு புதிய திட்டங்களே அறிமுகப்படுத்தப்பட்டன. முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் வளர்ந்து வருகிறது." மேலும், மொத்த நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 78% தொகை, மூன்று பெரிய திட்டங்களில் குவிந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதித் திட்டங்கள் ஐந்து ஆண்டுகள் வரை அல்லது குழந்தை 18 வயதை அடையும் வரை (இதில் எது முன்னதோ அது) லாக்-இன் காலத்துடன் வருகின்றன. "கல்வி போன்ற நீண்டகால இலக்குகளுக்காக முதலீடு செய்யும் ஒரு கட்டுப்பாட்டை லாக்-இன் அம்சம் உருவாக்குகிறது," என்று பிரப்லீன் பஜ்பாய் விளக்கினார்.

குழந்தைகளுக்கான பரஸ்பர நிதித் திட்டங்களின் வருவாய்கள், அவற்றின் அமைப்புக்கு ஏற்ப மாறுபடும். சில ஃபிளெக்சி-கேப் அணுகுமுறையைப் பின்பற்ற, மற்றவை ஹைப்ரிட் உத்திகளுக்கு நெருக்கமாகச் செல்கின்றன. சந்தை நிலவரத்தைப் பொறுத்து, இத்திட்டங்களின் மூன்று முதல் ஐந்தாண்டு கால கூட்டு சராசரி ஆண்டு வளர்ச்சி விகித (CAGR) வருவாய்கள் 20% முதல் 30% வரை இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஓராண்டு வருவாயை மட்டும் ஒப்பிட வேண்டாம் என்று பஜ்பாய் முதலீட்டாளர்களை எச்சரித்தார். "ஈக்விட்டி முதலீடுகளை ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பார்க்க வேண்டும்" என்றார் அவர். இந்தியாவில் கல்விக்கான பணவீக்கம் 10%-12% என மதிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர் ஃபிளெக்சி-கேப் அல்லது ஹைப்ரிட் திட்டங்களைத் தேர்வு செய்து இதேபோன்ற போர்ட்ஃபோலியோக்களை உருவாக்க முடியும். இருப்பினும், குழந்தைகளுக்கான பரஸ்பர நிதித் திட்டங்கள், இலக்குடன் ஒத்துப்போகும் தன்மையையும், கட்டாய முதலீட்டு ஒழுக்கத்தையும் அளிக்கின்றன. எஸ்பிஐ மேக்னம் சில்ட்ரன்ஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் சில்ட்ரன்ஸ் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட், டாடா சில்ட்ரன்ஸ் ஃபண்ட் மற்றும் யுடிஐ சில்ட்ரன்ஸ் ஃபண்ட் ஆகியவை இந்த வகையின் பிரபலமான திட்டங்களாகும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+