நீங்கள் கடன் வாங்கிவிட்டு குறிப்பிட்ட காலத்தில் தவணையை திரும்பச் செலுத்த முடியாமல் போய்விடக் கூடும். அல்லது கிரெடிட் கார்டு பில் எகிறி நீங்கள் திணறிக் கொண்டிருக்க முடியும். அவசர மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நீங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி விடலாம்.
அதுபோன்ற சமயங்களில் நீங்கள் ஒன்டைம் லோன் செட்டில்மென்டை உங்கள் வங்கியிடம் இருந்து பெறலாம். இது சரியான வழியா என்பதை நேரடியாக சொல்ல முடியாது. ஒன்டைம் செட்டில்மென்ட் எப்படி இயங்குகிறது..? ஒன்டைம் செட்டில்மென்ட் தேர்வை எடுக்க நினைத்தால் அது உங்களது கிரெடிட் ஸ்கோரை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

வாங்கிய கடனின் அசல் தொகையுடன் சேர்ந்திருக்கும் வட்டியையும் கூடுதலாக வேறு கட்டணங்களையும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும். குறித்த நேரத்தில் கடனை திரும்ப கட்ட வேண்டிய கடமை கடன் வாங்கியவருக்கு உள்ளது.
நிதி நிறுவனங்கள் தந்த தொகையை மொத்தமாக வசூலிக்க உரிமை இருக்கிறது. இருந்தாலும் சில அசாதாரண சூழ்நிலைகளில் கடன் தந்த நிறுவனங்கள் தங்களுக்குத் தரவேண்டிய தொகையை விட குறைவாக வாங்குவதற்கு சம்மதம் தரும். ஆனால் இதனால் கடன் வாங்கியவரின் கிரெடிட் மதிப்பு பாதிக்கப்படலாம்.
பர்சனல் லோன், ஆட்டோ லோன், ஹோம் லோன், கல்வி கடன், தொழில் கடன், கிரெடிட் கார்டு கடன்களை நீங்கள் ஒன்டைம் செட்டில்மென்ட் முறையில் செட்டில் செய்ய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனுமதிக்கிறது. உங்களது எதிர்கால கிரெடிட் ஸ்கோர் அல்லது நிதி தன்மையானது நீங்கள் செட்டில் செய்யும் கடன்களைப் பொறுத்து மாறக்கூடும்.
கடனை செட்டில் செய்வது என்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் எல்லா வழிமுறைகளையும் வைத்து மாதாமாதம் கடன் தவணைகளை திரும்பச் செலுத்த வேண்டும். அதன் பின்னர் வேறு வழியில்லை என்ற பிறகு தான் செட்டில்மெண்ட்டுக்கு வர வேண்டும்.
கிரெடிட் கார்டு, தொழில் கடன், பர்சனல் லோன் போன்றவற்றுக்கு செட்டில்மெண்ட் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்களை செட்டில்மெண்ட்டுக்குப் போய் சரி கட்டக்கூடாது.
நீங்கள் கடன் வாங்கும்போதே அதை சரியாகத் திரும்பச் செலுத்த வேண்டிய கடமை வந்து விடுகிறது. கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போனால் ஒன்டைம் செட்டில்மெண்ட் தேர்வை எடுக்கலாம். கடனை செட்டில் செய்யும்போது எந்த நிலையான விதிகளும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சூழ்நிலையைப் பொறுத்து பகுதி பகுதியாகவும் கடன் தொகையை திரும்ப வாங்குவதற்கு நிதி நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளும். பொதுவாக, நீங்கள் வழக்கமாக நிலுவையில் உள்ள தொகையை விட அதிகமாகச் செலுத்த முன்வருகிறீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து மாதாந்திரம் கட்டவேண்டிய தவணைகள் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டித் தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்கும்.
நிலுவைத் தொகையில் 25 சதவீதம் அல்லது 30 சதவீதம் செலுத்துவதற்கான வழியில் உங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். நீங்கள் படும் சிரமங்களை விரிவாக விளக்கலாம்.
இருப்பினும், நிலுவைத் தொகை மிகப் பெரியதாகவும், உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் மிகக் குறைவாகவும் இருக்கும்போது, நீங்கள் மிகக் குறைந்த செட்டில்மென்ட் தொகையைக் கோர வேண்டியிருக்கலாம்.
மொத்த நிலுவைத் தொகை உங்கள் ஆண்டு வருமானத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடனில் 10 முதல் 50 சதவிகிதம் வரை எதையும் நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். மாறாக, கடன் வழங்குபவர்கள் எப்பொழுதும் மொத்த நிலுவையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகைக்கு கடனைத் தீர்க்க முயற்சி செய்கிறார்கள். கடன் தீர்வுத் தொகை முடிந்தவரை குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications