இந்தியாவில் மகா ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாக கோல் இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்த கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கோல் இந்தியா நிறுவன பங்குகள் சிறப்பான ஒரு வாய்ப்பை வழங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் நிலக்கரி மற்றும் அது சார்ந்த மின் உற்பத்தியில் தனி நிறுவனமாக ஆதிக்கம் செலுத்து வருகிறது. மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனத்தில் தனக்கு சொந்தமான பங்குகளில் இரண்டு சதவீத பங்கை offer for sale முறையில் விற்பனை செய்கிறது .ஒரு பங்கின் விலை 412 ரூபாய் என்ற அளவில் மத்திய அரசு விற்பனை செய்கிறது. இது தற்போது பங்குச்சந்தையில் இந்த நிறுவன பங்கின் மதிப்பான 463 ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 11% குறைந்த மதிப்பாகும்.

நாளை மே 29ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை சில்லறை முதலீட்டாளர்கள் கோல் இந்தியா பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் முறையில் வாங்குவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவு டிவிடெண்ட் தரக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவன பங்காக கோல் இந்தியா தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கோடைகாலம் அதிகரித்து இருப்பதால் மின்சார தேவை நாடு முழுவதும் உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்த சூழலில் மின்சார உற்பத்தியில் முக்கியமான ஒரு நிறுவனமாக கோல் இந்தியா தான் செயல்படுகிறது.
இந்த நிறுவன பங்கு கிட்டத்தட்ட 5.70 சதவீதம் ஈவுத்தொகை தரக்கூடியதாக இருக்கிறது. மத்திய அரசு நிறுவனம் இந்தியாவில் கோல் இந்தியா நிறுவனத்தை தவிர இந்த துறையில் வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு வளர்ச்சியை இதுவரை எட்டவில்லை எட்ட முடியவும் இல்லை வருங்காலங்களிலும் இதற்கான தேவை அதிகரிக்கிறது என்பதால் நிச்சயம் இந்த பங்கினை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் என பரிந்துரை செய்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவில் மின்சார தேவை அதிகரித்து இருக்கிறது நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி உயர்ந்து வருகிறது எனவே கோல் இந்தியா நிறுவனம் இன்னும் சிறந்த வளர்ச்சியை பெரும் எனக் கூறுகின்றனர். கடந்த ஓராண்டு காலத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16 சதவீதமும் ஆறு மாதத்தில் 22 சதவீதமும் உயர்ந்திருக்கிறது கடந்த ஐந்து ஆண்டுகளில் 220 சதவீத லாபத்தை தந்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 130 ரூபாயாக இருந்த இதன் ஒரு பங்கு மதிப்பு தற்போது 463 ரூபாய் என உயர்ந்துள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு முதலில் சில்லறை அல்லாத பெரும் முதலீட்டாளர்களுக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இது முதல் நாளிலேயே ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் அதாவது எதிர்பார்த்ததை விட எட்டு மடங்கு அதிகமானவர்கள் இந்த பங்குகளை வாங்குவதற்கு ஆர்வமாக விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே நாளை சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியிலும் இதனை வாங்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

