இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025 ஆம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் மூடப்படும். இருப்பினும், மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விடுமுறை பட்டியலில் உள்ள சில விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், சில விடுமுறை நாட்கள் குறிப்பாக சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் வங்கி வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வைத்து, வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் வங்கிப் பணிகளைத் திட்டமிடுவது நல்லது. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது சனிக்கிழமைகளில் செயல்படும், ஆனால் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்படும்.

இருப்பினும், விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. மேலும், விடுமுறை நாட்களில் வங்கி ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 02: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 07: சாப்சார் குட் பண்டிகையை முன்னிட்டு வடகிழக்கு மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 08: இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 09: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 13: ஹோலிகா தகனத்தை முன்னிட்டு டேராடூன், ராஞ்சி, கான்பூர் மற்றும் லக்னோவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மார்ச் 14: ஹோலி பண்டிகையையொட்டி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 15: ஹோலி பண்டிகையையொட்டி அகர்தலா, புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மார்ச் 16: ஞாயிறு
மார்ச் 22: நான்காவது சனிக்கிழமை
மார்ச் 23: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 27: ஷப்-இ-கத்ர் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 28: ஜும்மா-உல்-விதா பண்டிகையை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மார்ச் 30: ஞாயிறு
எனவே, வாடிக்கையாளர்கள் இப்போது மார்ச் மாதத்திற்கான வங்கி வேலைகளை சரிபார்த்து உடனுக்குடன் முடித்து கொள்ள வேண்டும் அல்லது இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications