சென்னை: இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டுத் திட்டங்களில், பிக்சட் டெபாசிட் முக்கியமான ஒன்று. பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போல இல்லாமல் அபாயங்கள் குறைவாக இருப்பதால், அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. உங்களுக்கு பயன்படும் வகையில், இந்த மே மாதம் முதல், எந்த வங்கிகள், எவ்வளவு வட்டி விகிதத்தை FD திட்டத்திற்கு வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
FDகள் வங்கிகளில் மட்டுமல்லாமல், வங்கி சாரா நிதி நிறுவனங்களிலும் வழங்கப்படுகின்றன. தற்போது சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் NBFC நிறுவனங்கள், இது போன்ற பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதில ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. அவற்றில் சில வங்கிகளின் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளில் கொடுக்கப்படும் (1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்) 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6.50 சதவீதம் முதல் 8 சதவீதம்.
2. எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 7.25 சதவீதம் - 8.50 சதவீதம்.
3. ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6 சதவீதம் - 8.25 சதவீதம்.
4. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 7.25 சதவீதம் - 8.50 சதவீதம்.
5. நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6.25 சதவீதம் - 8.50 சதவீதம்.
தனியார் துறை வங்கிகளில் கொடுக்கப்படும் (1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்) 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. ஆக்சிஸ் பேங்க்: 6.70 சதவீதம் - 7.20 சதவீதம்.
2. பந்தன் பேங்க்: 5.85 சதவீதம் - 7.85 சதவீதம்.
3. சிட்டி யூனியன் பேங்க்: 6.25 சதவீதம் - 7.00 சதவீதம்.
4. CSB பேங்க்: 5.00 சதவீதம் - 7.75 சதவீதம்.
5. DBS பேங்க்: 6.50 சதவீதம் - 7.50 சதவீதம்.
பொதுத்துறை வங்கிகளில் கொடுக்கப்படும் (1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்) 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. பேங்க் ஆஃப் பரோடா: 6.85 சதவீதம் - 7.25 சதவீதம்.
2. பேங்க் ஆஃப் இந்தியா: 6.00 சதவீதம் - 7.25 சதவீதம்.
3. கனரா பேங்க்: 6.80 சதவீதம் - 7.25 சதவீதம்.
4. சென்ட்ரல் பேங்க்: ஆஃப் இந்தியா: 6.25 சதவீதம் - 7.25 சதவீதம்.
5. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: 6.50 சதவீதம் - 7.30 சதவீதம்.
வெளிநாட்டு வங்கிகளில் கொடுக்கப்படும் (1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்) 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. Deutsche பேங்க்: 7.00 சதவீதம் - 8.00 சதவீதம்.
2. HSBC பேங்க்: 4.00 சதவீதம் - 7.25 சதவீதம்.
3. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க்: 6.75 சதவீதம் - 7.50 சதவீதம்.


Click it and Unblock the Notifications