சென்னை: பிக்சட் டெபாசிட்கள் முதலீட்டாளர்களிடையே பிரபலமான தேர்வாக உள்ளது. ஏனெனில், இது உறுதியான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான ஒன்றாகவும் இருக்கிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, FDகள் மிகவும் விருப்பமான முதலீட்டுத் தேர்வாகும். இந்தப் பதிவில் உங்கள் முதலீட்டின் மூலம் மாதம் ரூ. 8,000 எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம்.
ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FDகள்) என்று சொல்லப்படும் டெர்ம் டெபாசிட்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் உங்கள் பணத்தை FD-யில் போடும்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் நிலையான வட்டியைப் பெற முடியும். தொடர்ந்து ஒரு சிறு தொகையை முதலீடு செய்வதால், FD முதிர்ச்சியடையும் போது அதிக வட்டியுடன் பெற முடியும்.

FDகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாகக் கூட்டு முதலீட்டு திட்டம். அதாவது 'Cumulative Deposits' என்று சொல்லப்படும், வட்டி தொகையை மறுமுதலீடு செய்யும் முறை. இந்தத் திட்டத்தில் வட்டி முதிர்வு காலத்தில் அசல் தொகையுடன் சேர்க்கப்படும். நீண்ட காலத்திற்கு செல்வத்தை சேமிக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இரண்டாவதாக Non - Cumulative Deposits என்று சொல்லப்படும் முதலீட்டு முறை. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, மாதந்தோறும் வட்டி வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற தனிநபர்கள், குறிப்பாக முதியவர்கள், தங்கள் செலவுகளை ஈடுகட்ட மாத வருமானம் தேவைப்படுபவர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது.
வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் FD திட்டங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்:
தற்போது, வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் மூத்த குடிமக்களுக்கு, 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 9.50 % வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் பொதுவாக மற்ற வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது சிறந்த FD சலுகைகளைப் பெறுகிறார்கள்.
ஸ்மால் பைனான்ஸ் பேங்குகள், பொதுவாக FDகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஸ்மால் பைனான்ஸ் பேங்குகளில், ஒரு ஆண்டுக்கான FD திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6.50 சதவீதம் முதல் 8 சதவீதம்.
2. எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 7.25 சதவீதம் - 8.50 சதவீதம்.
3. ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6 சதவீதம் - 8.25 சதவீதம்.
4. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 7.25 சதவீதம் - 8.50 சதவீதம்.
5. நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6.25 சதவீதம் - 8.50 சதவீதம்.
அதேபோல் NBFC நிறுவனங்களும் அதிகமான வட்டி அளிக்கிறது.
1. பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்: 7.40 சதவீதம்
2. ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸ்: 7.25 சதவீதம்
3. கேரளா டிரான்ஸ்போர்ட் டெவெலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்: 7.00 சதவீதம்
4. மகேந்திரா பைனான்ஸ்: 7.50 சதவீதம்
5. மணி பால் ஹவுஸிங் பைனான்ஸ்: 8.25 சதவீதம்
6. முத்தூட் கேப்பிட்டல் சர்வீசஸ் லிமிடெட்: 7.21 சதவீதம்
7. PNB ஹவுஸிங் பைனான்ஸ்: 7.45 சதவீதம்
8. ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட்: 7.59 சதவீதம்
9. சுந்தரம் பைனான்ஸ்: 7.45 சதவீதம்
முதலீட்டாளர்கள் எந்தவொரு FD திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு முன், வங்கிகள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனின் (DICGC) கீழ் காப்பீடு செய்யப்படுகின்றன என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். இது முதலீட்டாளர்களின் அசல் தொகை பாதுகாக்கப்படுகிறது என்ற உறுதியை அளிக்கிறது. மேலும், ஒவ்வொரு டெபாசிட்டரும் அசல் மற்றும் வட்டித் தொகை இரண்டிற்கும் அதிகபட்சமாக ரூ. 5,00,000 வரை காப்பீடு பெற முடியும்.
FD கால்குலேட்டர்: நீங்கள் ரூ.10 லட்சம் FDகளில் வைத்திருந்தால், ஆண்டுக்கு அதிகபட்சமாக 9.50% வட்டி விகிதத்தில், நீங்கள் மாத வட்டியாக ரூ.7,916 (கிட்டத்தட்ட ரூ. 8,000 ரூபாய்) பெறுவீர்கள்.
8% வட்டி விகிதத்தில், ரூ.10 லட்சம் FDகளில் டெபாசிட் செய்து வைத்திருந்தால், மாதாந்திர வட்டியாக ரூ.6,666 பெற முடியும். 7% வட்டி விகிதத்தில், ரூ.10 லட்சம் FDகளில் டெபாசிட் செய்து வைத்திருந்தால், மாத வட்டியாக ரூ. 5,833 பெற முடியும்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications