இந்தியாவில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு இரண்டு நடைமுறைகள் தற்போது அமலில் இருக்கின்றன. ஒன்று பழைய வரி கணக்கு தாக்கல் நடைமுறை, மற்றொன்று புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறை. மத்திய அரசு பொருத்தவரை புதிய வரி கணக்கு நடைமுறையில் அதிகமானவர்கள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே புதிய வரி கணக்கு முறையில் தான் அரசு பல்வேறு சலுகைகளையும் அறிவித்திருக்கிறது.
புதிய வரி கணக்கு நடைமுறை: புதிய வரி கணக்கு நடைமுறையை பொறுத்தவரை ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்த வித வரியும் இல்லை என்ற வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதிய வரி முறையில் வருமான வரி விகிதங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
ரூ.4 லட்சம் வரை - 0%
ரூ.4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் - 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ. 12லட்சம் - 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் - 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் - 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் - 25%
ரூ.24 லட்சத்திற்கு மேல் - 30%

பழைய வரி கணக்கு நடைமுறை: பழைய வரி கணக்கு நடைமுறையை பொறுத்தவரை பல்வேறு வரி சலுகைகள் கிடைக்கின்றன. எனவே பெரும்பாலான சம்பளதாரர்கள் தங்களின் வருமான வரியை குறைப்பதற்காக இந்த வரி கணக்கை தான் பின்பற்றுகின்றனர். இதில் வருமான வரி விகிதங்கள் என பார்த்தால்
ரூ.2.5 லட்சம் வரை - 0%
ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் - 5%
ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் - 20%
ரூ.10 லட்சத்திற்கு மேல் - 30%
என்ன வித்தியாசம்: இந்தியாவில் பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை இரண்டுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசம் வரி சலுகைகள் தான். பழைய வரி கணக்கு நடைமுறையை பொருத்தவரை பிரிவு 80சி இன் கீழ் நாம் நம்முடைய முதலீடுகள் உள்ளிட்டவற்றை கணக்கு காட்டி ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். ஆனால் புதிய வரி நடைமுறையில் இத்தகைய சலுகைகள் எதுவும் கிடையாது. ஆனால் வருமான வரி உச்சவரம்பும், வரி விகிதங்களும் அதிகம்.
எதை தேர்வு செய்வது?: இந்த சூழலில் தான் பழைய வரிநடை முறையை தேர்ந்தெடுப்பதா அல்லது புதிய வரி நடைமுறையை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 15ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சம்பளதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் பழைய வரி நடைமுறையில் இருந்து புதிய வரி நடைமுறைக்கு மாறிக்கொள்ளலாம்.
வரி விலக்குகள்: எனக்கு வீட்டு கடன் இருக்கிறது அதற்கு நான் ஈஎம் ஐ செலுத்திகிறேன் என்பவர்கள் வீட்டு கடனுக்கான வட்டி தொகைக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் இது பழைய வரி நடைமுறையில் கிடைக்கிறது. அதே போல ஹவுஸ் ரெண்ட் அலோவென்ஸ் எனப்படும் ஹெச் ஆர் ஏ மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியம், யுலிப் திட்டங்கள், செல்வ மகள் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்பவர்கள் 80சி பிரிவின் கீழ் ஓர் நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை பெறலாம். எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பழைய வரி கணக்கு முறையை தேர்வு செய்யலாம்.
அதிக வரி விகிதங்கள்: நான் மேற்கண்ட முதலீடுகளை மேற்கொள்ளவில்லை , எளிமையான ஒரு வரி கணக்கு நடைமுறையை தேர்வு செய்ய விரும்புகிறேன் என்றால் புதிய வரி கணக்கு முறைக்கு மாறலாம். இதில் வருமான வரி விகிதங்களும் அதிகம். அது தவிர ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இணையதளத்திற்கு செல்லும் போதே அதில் புதிய வரி முறையா அல்லது பழைய வரி முறையா என கேட்கும் அதில் பொருத்தமானதை தேர்வு செய்யலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications