சென்னை: விலை ஏற்றம் அதிகரித்துள்ள காரணத்தினால், வீடு வாங்குவது என்பது பலருக்கும் கனவாக தான் இருக்கிறது. ஆனாலும் சிலர் விடாமுயற்சியுடன் லோன் பெற்றாவது வீடு வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு வருமானம் குறைவாக இருப்பதால் வங்கிகள் லோன் தர மறுக்கும். இது போன்ற சூழ்நிலைகள் இருக்கும்போது, நீங்கள் ஜாயிண்ட் ஹோம் லோன் பெறலாம். நீங்கள் ஜாயிண்ட் ஹோம் லோன் பெற இருந்தால், அதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
ஜாயிண்ட் ஹோம் லோன் என்றால் என்ன?: ஜாயிண்ட் ஹோம் லோன் என்பது வேறு ஒருவரோடு கூட்டு சேர்ந்து எடுக்கும் லோன் ஆகும். வருமானம் குறைவாக இருப்பது, வயது அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் வங்கிகள் நமக்கு ஜாயிண்ட் லோன் பெறுவதை பரிந்துரைக்கும். நிதி பற்றாக்குறையால் ஏற்படும் கஷ்டங்களைத் தவிர்க்க இந்த ஜாயிண்ட் ஹோம் லோன்கள் உதவியாக இருக்கும்.

ஆனால், அவ்வாறு ஜாயிண்ட் ஹோம் லோன் பெறுவதற்கு முன்பு, நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை உங்கள் இணை விண்ணப்பதாரரின் தகுதி, அவரின் சம்பளம் மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற சில விஷயங்களைக் கவனிக்கும் போது எளிதில் லோன் பெற முடியும்.
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், ஜாயிண்ட் ஹோம் லோன் பெறுவது என்னவோ எளிதான ஒன்றுதான். ஆனால் அதனை சரிவர திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கு நாம் இணையும் விண்ணப்பதாரர் தகுதியுள்ளவரா என்பதை ஒன்றுக்கு இருமுறை யோசிக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களுடைய கடனைத் திருப்பி செலுத்தும் காலத்தில் சுமூகமான அனுபவத்தை, நீங்கள் பெற முடியும்.
ஜாயிண்ட் ஹோம் லோன் பெறுவதற்கு முன்பு, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
உங்களுடைய இணை விண்ணப்பதாரரின் தகுதி: கூட்டாக சேர்ந்து ஹோம் லோன் பெறுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரரை அடையாளம் காண வேண்டும். லோன் பெற இணை விண்ணப்பதாரராக உங்களுடைய வாழ்க்கைத் துணை, பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அல்லது குழந்தைகள் என யாரை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் இருவரின் ஒருங்கிணைந்த வருமானம், கடன் தகுதி மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பிறகு உங்களுக்கு கடன் தொகையை வழங்கும்.
கிரெடிட் ஸ்கோர்: நீங்கள் எந்த லோன் பெற வேண்டும் என்றாலும் வங்கிகள் முதலில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைத் தான் சரி பார்க்கும். கிரெடிட் ஸ்கோர், உங்களுடைய பொறுப்பான நிதி நடத்தையை பிரதிபலிக்கிறது. நீங்கள் பெற்ற கடன்களை எவ்வாறு செலுத்தி இருக்கிறீர்கள், எந்தத் தேதியில் செலுத்தி இருக்கிறீர்கள் போன்ற விவரங்களைக் கிரெடிட் ஸ்கோரை வைத்தே வங்கிகள் தெரிந்து கொள்ளும். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால், வங்கிகள் உங்களுக்கு கடன்கள் வழங்குவது சற்று கடினம் தான். எனவே லோன் பெறுவதற்கு முன்பு உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கடன் தொகையை திருப்பிச் செலுத்துதல்: தனிப்பட்ட நபர்கள் ஹோம் லோன் பெரும் தொகையை விட கூட்டாக சேர்ந்து ஜாயிண்ட் ஹோம் லோன் பெற நினைத்தால், அதிக தொகையைப் பெறலாம். இருப்பினும் பிற்காலத்தில் நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக உங்களுக்கு தேவைப்படும், தொகையை மட்டுமே கடனாகப் பெறுவது நல்லது.
அது மட்டும் இன்றி, நீங்கள் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் குறித்தும் வங்கிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சான்றாக, ஒருவர் பெற்ற கடனை 6 மாதங்களில், முழுமையாக திருப்பிச் செலுத்த நினைத்தால், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சில வங்கிகள் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை முழுமையாக, நீங்கள் பெற்ற கடன் தொகையை செலுத்துவதற்கு அனுமதிக்காது.
ஜாயிண்ட் ஹோம் லோன் பெறும்போது உங்களுடைய சொத்தை லோன் பெற விரும்பும் இணை விண்ணப்பதாரருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வட்டி விகிதங்கள்: லோன்கள் என்றாலே வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களை ஈர்க்கும் விதமாக சிறப்பு சலுகைகள் மற்றும் வட்டி விகிதங்களை கொடுக்கும். இதனால் நீங்கள் எந்த வங்கியில் லோன் பெறலாம் என்பது குறித்த குழப்பம் ஏற்படலாம். இதனை தெளிவு செய்யும் விதமாக, உங்களின் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு உங்களுடைய விருப்பத்திற்கு இணங்க, ஏதேனும் ஒரு வங்கியில் லோன் பெறலாம்.
ஆவணங்கள்: ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைப்பதன் மூலம் உங்களுடைய கடன் ஒப்புதல் விரைவில் முடியும். இதனால் நீங்கள் உரிய நேரத்தில் லோன் பெறலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications