கடன்களில் பலவிதங்கள் உள்ளன ஆனால் கன்ஸ்யூமர் டியூரபிள் கடன் ஒருவரது வாழ்க்கைத் தரத்தைக் கூட்டக்கூடிய ஒன்றாகும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் மற்ற வகை கடன்களை விட கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களின் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும்.
எலக்ட்ரானிக் அப்ளையன்சஸ், கேட்ஜெட்கள் மற்ற விலை உயர்ந்த வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கு கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்கள் உதவுகின்றன. இதில் சில சிரமங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

மற்ற கடன்களை விட கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் வாடிக்கையாளர்களை அதை திரும்பச் செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். எனவே வாங்கும் பொருளின் விலை கடுமையாக உயர்ந்திருக்கும், இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
கண்ணுக்குத் தெரியாத மறைவான கட்டணங்கள் இந்தக் கடனில் திணிக்கப்பட்டிருக்கும். பிராஸசிங் கட்டணம், முன்கூட்டியே செலுத்தினால் அபராதங்களும் விதிக்கப்படும். இது வாடிக்கையாளர்களின் கடன் சுமையை அதிகரிக்கும்.
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களை வாங்க நேர்ந்தால் அது அவரது கிரெடிட் ஸ்கோரை நெகட்டிவாக பாதிக்கும். எனவே எதிர்காலத்தில் கடன் வாங்கும் வாய்ப்பும் பறிபோகலாம். இதனால் கடன் தருபவர்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரை கவனமாக ஆராய்வார்கள்.
சில டீலர்கள் குறிப்பிட்ட பிராண்டுகள், தயாரிப்புகளுக்கு இந்தக் கடனைத் தரமாட்டார்கள். இதனால் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே இந்தக் கடன் மூலம் வாங்க முடியும். இந்த சவால்களுடன் வாடிக்கையாளர்களுக்கு நிதிப்பிரச்னையை அதிகரிக்கக் கூடும். பல்வேறு வழிகளில் அதை சமாளிக்க வேண்டியிருக்கலாம்.
தங்களிடம் போதிய பணம் இல்லாவிட்டாலும் சில அத்தியாவசிய பொருட்களை வாங்கியாக வேண்டிய நிலையில் இருப்பார்கள். தங்களது வாழ்க்கைத் தரத்தை உயரத்துவதற்காக இந்த பொருட்களை வாங்குவார்கள்.
கூடுதல் கட்டணம் இல்லாத இஎம்ஐகளை சில கடன் நிறுவனங்கள் தரும். இதற்காக முன்பணம் செலுத்தவும் தேவையிருக்காது. இதுபோன்ற கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியாகும். கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களை முன்னர் வாங்கி முறையாகத் திரும்பச் செலுத்தியவர்களுக்கு முன்பைவிட குறை்நத வட்டி விகிதத்தில் இந்தக் கடன்கள் கிடைக்கலாம். கேஷ்பேக் ஆபர் கூட வழங்கப்படலாம்.
இதனால் அவர்களது செலவீனத்துக்கு ஒரு லாபம் இருக்கும். மொத்தத்தில் கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்கள் இருபக்கமும் கூரான கத்தி போன்றது. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications