கிரெடிட் கார்டுகள் இன்று பலராலும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிட்டது. கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டாலும், அவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எந்தவித நிதி சிக்கலும் இன்றி உங்களை பாதுகாக்கும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் கிரெடிட் கார்டுகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் பல்வேறு நன்மைகளை வழங்கும். அதுவே பில் செலுத்துவதில் தாமதம், தேவையற்ற செலவு ஆகியவற்றிற்கு பயன்படுத்தினால் கடன் சுமை அதிகரிக்கலாம். கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒரு சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
வட்டி விகிதங்கள்: கிரெடிட் கார்டுகளுக்கு வருடத்திற்கு 26 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பல்வேறு கிரெடிட் கார்டு வழங்குனர்களால் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் பிற கட்டணங்களும் அடங்கும். உதாரணமாக சர்வதேச பரிவர்த்தனை கட்டணம், வருடாந்திர கட்டணம் ஆகியவற்றையும் கிரெடிட் கார்டு பெறுபவர்கள் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் காலக்கெடுவிற்குள் பில் தொகையை செலுத்த தவறினால் நிலுவைத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். எனவே ஒருவர் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு கார்டின் விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிகமாக செலவு செய்யக்கூடாது: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது கவனமாக செலவு செய்ய வேண்டும். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்கள் செலவினங்களை கட்டுப்படுத்த தெரிந்து வைத்திருக்க வேண்டும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலவழிக்கும் பணத்தை நீங்கள் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் செலவு செய்யாமல் இருப்பது நிதி பாதுகாப்பிற்கு அவசியம்.
கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் கார்டை பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கும் கிரெடிட் ஸ்கோர்கள் முக்கியம் எனவே சரியான நேரத்தில் பணம் செலுத்துவது மற்றும் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும்.
கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். இதை வைத்து தான் உங்களுக்கு கடன் தரலாமா வேண்டாமா என்று வங்கிகள் முடிவெடுக்கும். கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் அவை நல்ல நிதி நடத்தையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நீங்கள் வாங்கிய கடனை எப்படி செலுத்தி இருக்கிறீர்கள்? சரியான நேரத்தில் செலுத்தி இருக்கிறீர்களா? என்பதை பொறுத்து தான் இந்த கிரெடிட் ஸ்கோர் அமையும்.
ரிவார்டுகள்: ஒரு சில கிரெடிட் கார்டுகளுக்கு கேஷ் பேக் மற்றும் ரிவார்ட்ஸ் வழங்கப்படுகின்றன எனவே நீங்கள் எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்களோ? அதற்கு ஏற்ப கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள். உதாரணமாக சில கிரெடிட் கார்டுகள் பயணத்திற்காக செலவு செய்யும்போது கேஷ்பேக் வழங்குகின்றன. சில கிரெடிட் கார்டுகள் மளிகை பொருட்களுக்கு கேஷ்பேக் வழங்குகின்றன. எனவே நீங்கள் எதற்கு அதிகம் செலவு செய்ய இருக்கிறீர்களோ? அதைப் பொறுத்து கிரெடிட் கார்டை தேர்ந்தெடுங்கள்.
கிரேஸ் பீரியட்: பல கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியில்லா கடனை வழங்குகிறது. எனவே வட்டி வருவதற்கு முன்பே உங்கள் கடனை திருப்பி செலுத்தி விட்டால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
மினிமம் பேமெண்ட்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்களால் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்த முடியும். ஆனால் மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படுவதால் நீண்ட காலத்திற்கு மினிமம் பேமென்ட் மட்டுமே செய்து வருவது உங்களை நிதிச் சிக்கலில் ஆழ்த்தும்.
பாதுகாப்பு: இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை ஒருபோதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவ்வப்போது கிரெடிட் கார்டு அறிக்கைகளை சரி பாருங்கள். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை தென்பட்டால் உடனடியாக கிரெடிட் கார்டு வழங்குனரிடம் தெரிவியுங்கள்.
பணம் செலுத்த வேண்டிய தேதிகள்: தாமதமாக பில் செலுத்துவது, உங்கள் கிரெடிட் கார்டை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியையும் அதிகரிக்கலாம். எனவே பேமெண்ட் செலுத்த வேண்டிய தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ: நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க உங்கள் கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோவை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருங்கள்.
கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிப்பதற்கு முன்பு மேலே கூறப்பட்டுள்ள சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகு விண்ணப்பியுங்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications