கிரெடிட் கார்டுகள் என்பது எதிர்பாராத காலகட்டத்தில் உங்கள் செலவுகளை ஈடுகட்ட பயன்படும் ஒரு முக்கிய அம்சமாகும். குறிப்பாக கையில் காசில்லாத சமயங்களில் இது ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
எனினும் கிரெடிட் கார்டினை சரியாக பயன்படுத்தியவர்களை விட, அதனை தவறாக பயன்படுத்தியவர்கள் தான் மிக அதிகம். பலரும் வாங்கும் போது ஆர்வத்துடன் வாங்கினாலும், அதனை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவதில்லை.
எனினும் கிரெடிட் கார்டுகளில் பல விதமான ஆஃபர்கள், தள்ளுபடிகள், ஊக்குவிப்பு புள்ளிகள் என பலவும் கிடைக்கின்றன. இதனை சரியாக பயன்படுத்தினால் , இது பயனுள்ள ஒன்றாக இருக்கும். ஆனால் பயனர்களில் பாதிக்கும் மேல் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை.
கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு
கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். இன்றைய காலகட்டத்தில் கிரெட்டிட் கார்டுகளின் அவசியம் மிக முக்கியம் எனலாம். இதனை அவசர காலகட்டத்தில் பொருட்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மாத மாதம் தவணையாக செலுத்தியும் கொள்ளலாம். அல்லது மொத்தமாகவும் திரும்ப செலுத்திக் கொள்ளலாம். எனினும இதில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வருடாந்திர கட்டணம்
கிரெடிட் கார்டுகளுக்கு விதிக்கப்படும் வருடாந்திர கட்டணம் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட ஒன்றாகும். கிரெடிட் கார்டு வருடாந்திர கட்டணம் என்பது வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படுகின்றது. இது நீங்கள் வாங்கும் கார்டை பொறுத்து கட்டணங்கள் விதிக்கப்படும். வங்கிகள் எப்போதாவது இலவசமாக இந்த கார்டுகளை கொடுப்பார்கள். ஆக கிரெடிட் கார்டு வாங்கும்போது இதுபோன்ற விஷயங்களை கவனிப்பது நல்லது. முடிந்தளவுக்கு குறைந்த கட்டணம் அல்லது கட்டமில்லா கார்டினை வாங்கலாம்.
வட்டி விகிதம்
உங்களது கிரெடிட் கார்டு பில்லிங் செலுத்தும்போது, அதில் மொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாத பட்சத்தில் எவ்வளவு கட்டணம் விதிகப்படுகின்றது. ஆக அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆக இதுபோன்ற கட்டணங்கள் எவ்வளவு விதிக்கப்படும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதுபோன்ற சிறிய விஷயங்கள் கூட, உங்களை அதிக கட்டணங்கள் செலுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
ஓவர் லிமிட் - கட்டணம்
உங்களது கிரெடிட் கார்டின் லிமிட்டினை தாண்டாதீர்கள். அப்படி தாண்டி பயன்படுத்தும்பட்சத்தில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து வசூலிக்கப்படுகிறது. எனினும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும் எனலாம்.
சர்வதேச பரிவர்த்தனை கட்டணம்
உங்களது கிரெடிட் கார்டுகளை சர்வதேச அளவில் பயன்படுத்தும் போது அதற்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். இதற்காக வங்கிகள் அதிக கட்டணத்தை விதிக்கின்றன. முடிந்த மட்டில் உங்களது சர்வதேச பரிவர்த்தனையில் கார்டுகளை பய்னபடுத்துவதை தவிர்க்கலாம்.
தாமத கட்டணம்?
தாமத கட்டணம் என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. நீங்கள் உங்களது நிலுவையை தாமதமாக செலுத்தும் போது அதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த கட்டணமும் மிக அதிகமாக இருக்கும். ஆக இதனையும் முன் கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications