பெரும்பாலான இந்தியர்களுக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் உதவக்கூடிய உரிய தோழனாக இருப்பது கிரெடிட் கார்டுகள். இதன் முக்கிய நன்மைகளில் ஒன்று ரிவார்ட் பாயிண்ட்டுகள். கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ரிவார்ட் பாய்ண்டுகள் உண்மையில் அதன் பயனர்களுக்கு உதவுமா, அவற்றுக்கு மதிப்பு உண்டா? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் கார்டின் பயன்பாடு, ரிவார்டுகள் கடன் பயன்பாட்டு விகிதம் ஆகியவற்றை புரிந்து கொள்வது அவசியம். ரிவார்ட் பாய்ண்டுகளுக்கென்று குறிப்பிட்ட எக்ஸ்பைரி தேதி இருக்கும். அதற்குள் அவற்றைப் பயன்படுத்திவிட வேண்டும்.

கிரெடிட் கார்டை ஒரு கடனாக நினைத்து, தேவையான பொருட்களை மட்டும் வாங்கி, சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்தினால், அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். தேவை இல்லாமல் பொருட்களை வாங்கி, பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் போனால், அது நமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அசிட் சி. மேத்தா இன்வெஸ்ட்மென்ட் இன்டர்மீடியேட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், இந்தியாவில் கிரெடிட் கார்டு செலவு பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு செலவில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டின் பயன்பாடு 2 சதவீதம் குறைந்துள்ளது. அதோடு கிரெடிட் கார்டு மூலம் பயனர்கள் செலவு செய்த மொத்த தொகை 1.8 டிரில்லியனாக உள்ளது. பரிவர்த்தனை எண்ணிக்கையும் 1 சதவீதம் குறைந்து 430 மில்லியனாக உள்ளது. ஆனால் வருடாந்திர கணக்கை பார்த்தால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. HDFC, SBI, மற்றும் ICICI வங்கிகள் கிரெடிட் கார்டு சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
கிரெடிட் கார்டு ரிவார்ட் பாயிண்ட்டுகள்: ரிவார்ட் பாயிண்ட்டுகள் என்பது வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளை மக்கள் செலவு செய்வதை தூண்டுவதற்காக வழங்கும் பாயிண்ட்டுகள் ஆகும். ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது உங்களுக்கு பாயிண்ட்டுகள் வழங்கப்படும்.
இந்த ரிவார்ட் பாயிண்ட்களை நீங்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விமான டிக்கெட் முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு போன்றவற்றை செய்ய பயன்படுத்தலாம். ஆனால் ரிவார்ட் பாயிண்ட்டுகளை நீங்கள் பயன்படுத்தும் போது எதற்கு அதிக மதிப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக சில கிரெடிட் கார்டுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க பயன்படுத்தினால் அதிக சலுகை கிடைக்கும். மாறாக பயணத்திற்கு முன்பதிவு செய்ய பயன்படுத்தினால் அதன் மதிப்பு சற்று குறையலாம். அதேபோல ரிவார்ட் புள்ளிகளுக்கு எக்ஸ்பைரி தேதி இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தாவிட்டால் அந்த பாயிண்ட்கள் காலாவதியாகிவிடும்.
அதன் பின்பு நீங்கள் நினைத்தாலும் பயன்படுத்த முடியாது. உங்கள் செலவழிப்பு நடத்தையின் அடிப்படையில் தான் பாயிண்டுகள் கிடைக்கும். ஒவ்வொரு கிரெடிட் கார்டு வழங்குனரும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைக்கு அதிக ரிவார்டு புள்ளிகளை நிர்ணயித்திருப்பார்கள். எனவே உங்கள் செலவு முறையின் அடிப்படையில் தான் கிரெடிட் கார்டை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கிடைக்கும் ரிவார்டுகளின் மதிப்பும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications