மத்திய அரசு வரி வருமானத்தை அதிகரிக்க அனைத்து விதமான முயற்சிகளை செய்து வரும் வேளையில் தற்போது முக்கியமான பிரிவை கட்டம்கட்டி அடித்துள்ளது.
வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் இந்திய மக்கள் தங்களது கிரெடிட் கார்டு-களை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீத ஆதாரத்தில் இருந்து வரி வசூலிக்கும் (TCS) நடைமுறையை ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த அறிவிப்பு யாருக்கெல்லாம் பாதிப்பாக அமையும்..? : வெளிநாட்டு சுற்றுலாவுக்கு செல்வோர் இந்திய வங்கிகளின் கணக்கு வைத்து கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டு செலவு செய்யும் அனைவருக்கும் பாதிப்பாக அமையும்.
ஆர்பிஐ நிர்வாகம் செய்யும் LRS எனப்படும் Liberalised Remittance Scheme கீழ் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் வரையில் அதாவது 250000 டாலர் வரையில் எவ்விதமான முன் அனுமதி இல்லாமல் பணம் வெளிநாட்டில் செலவு செய்ய முடியம்.
இந்த நிலையில் இந்தியர்கள் வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் போது செய்யப்படும் கிரெடிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் Liberalised Remittance Scheme கீழ் வராது. ஆனால் ஜூலை 1 முதல் இது அனைத்தும் LRS கீழ் வருவதால் அனைத்து வெளிநாட்டு நிதி பரிமாற்றமும் 250000 டாலருக்குள் அடங்கும்.
தற்போது வெளிநாடுகளில் பயணத்தின் போது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது முன்பு LRS இன் கீழ் இல்லை, இதேபோல் வெளிநாட்டு கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதேபோல் மருத்துவ செலவுகள், கல்வி செலவுகளுக்கான பரிமாற்றத்திற்கும் 5 சதவீத டிசிஎஸ் வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.

ஜூலை 1 முதல் அனைத்து வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கும் 20 சதவீதம் ஆதாரத்தில் இருந்து வரி வசூலிக்கப்படும் (TCS). இதேபோல் கிரெடிட் கார்டு மூலம் தண்ணீர் பாட்டில் வாங்கினால் கூட LRS அளவான 250000 டாலர் கணக்கில் சேர்க்கப்படும்.
இதனால் வெளிநாட்டில் நிதி பரிமாற்றம் செய்வோர் அனைவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இதேபோல் TDS, TCS என இரு வரி வசூல் முறை உள்ளது. இதில் TDS என்பது தனிநபரின் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிப்பது. TCS என்பது ஒரு பொருளை வாங்கும் போது விற்பனையாளர் வசூலிப்பது, விற்பனையாளர் வசூலித்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications