நேர நேரத்திற்கு, வாங்கிய கடனுக்கான EMI தொகையை செலுத்திய பிறகும், கிரெடிட் ஸ்கோர் எதிர்பாராத விதமாக குறைகிறதா? கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கிரெடிட் ஸ்கோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சில மறைந்திருக்கும் காரணங்கள் இருக்கலாம். அவற்றை புரிந்து கொண்டு சரி செய்தால் மீண்டும் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியும். அவை என்னென்ன காரணங்கள் மற்றும் நீங்கள் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்தில் இருக்கும் ஒரு நம்பர். இந்த நம்பரை வைத்தே வங்கிகள் உங்களுடைய கடன் வரலாற்றை தெரிந்து கொள்ளும். கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், அவை நல்ல ஸ்கோராகப் பார்க்கப்படுகிறது.

அதுவே 750-க்கு கீழ் இருந்தால், உங்கள் கடன் வரலாற்றில் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் வாங்கிய கடனுக்கு, எந்தத் தேதியில் EMI செலுத்தி இருக்கிறீர்கள்? எவ்வளவு பொறுப்புடன் நடந்திருக்கிறீர்கள்? என்பதை இந்த ஒரு ஸ்கோரை வைத்தே வங்கிகள் தீர்மானித்து விடும்.
எப்பொழுதுமே தவறாமல் கடனை செலுத்தி வருகிறேன்.. ஆனால் என்னுடைய கிரெடிட் ஸ்கோர் குறைகிறது என்று புலம்பும் நபர்கள்.. அதன் பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தாங்கள் வாங்கிய கடனை செலுத்தும் போது.. ஒரு நாள் தாமதமாக செலுத்தினால் கூட.. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 100 வரை குறையலாம். ஆனால் சரியாக செலுத்துபவருக்கும், கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு என்ன காரணம் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
உயர்ந்த கடன் பயன்பாட்டு விகிதம்: இதனை ஆங்கிலத்தில் என்று Credit Utilization Ratio என்று கூறுவர். இந்தக் கடன் பயன்பாட்டு விகிதம் என்பது உங்களுடைய மொத்த கிரெடிட் கார்டு கடனில், நீங்கள் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்? என்பதைக் குறிக்கிறது.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால்.. உங்களுடைய கிரெடிட் கார்டின் வரம்பு ரூ. 1 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதில் ரூ. 50,000 ரூபாய் செலவு செய்துவிட்டால், உங்களுடைய கடன் பயன்பாட்டு விகிதம் 50% ஆகும்.
ஒட்டு மொத்த கிரெடிட் கார்டு வரம்பையும் செலவு செய்வது வங்கிகளால் ஆபத்தான நடைமுறை என்று பார்க்கப்படுகிறது. எனவே இதில் அதிக அளவிலான கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
புதிய கடன்கள்: குறுகிய கால இடைவெளியில், பல கடன்களுக்கு விண்ணப்பிப்பதும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக ஒரு நபர் 848 கிரெடிட் ஸ்கோர் இருக்கும்போது, ஒரு புதிய கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறார். அப்பொழுது அவருக்கு 40 புள்ளிகள் வரை கிரெடிட் ஸ்கோர் குறைந்துள்ளது.
இதன் பின்னணியில் இருக்கும் காரணம் தெரியுமா? என்னதான் தொடர்ந்து எந்தவித தாமதமின்றி EMI செலுத்தி வந்தாலும், புதிய கடன்களை வாங்குவதும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். ஆனால் இந்த தாக்கம் நீங்கள் சரிவர அந்த புதிய கடனுக்கு EMI செலுத்தும் போது சரி செய்யப்படலாம்.
வேறொருவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லையா: உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக ஆட்-ஆன் கிரெடிட் கார்டு வாங்கி இருந்தாலும் அல்லது இன்னொருவருடன் சேர்ந்து விண்ணப்பம் பெற்று ஜாயின்ட் லோன் வாங்கி இருந்து, அவர் சரிவர EMI கட்ட தவறினாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே கடன் வாங்கும் போது நீங்கள் யாருடன் சேர்ந்து கடனை வாங்குகிறீர்கள் என்பதை சரிவர கவனிக்க வேண்டும். தேவை என்றால் மட்டுமே ஜாயின்ட் லோன் பெற விண்ணப்பிக்கலாம்.
அடையாள திருட்டு (Identity Theft): மோசடி செயல்பாடுகள் மூலம் உங்கள் பெயரில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கலாம். இது உங்களுக்கு தெரியாமலேயே, உங்கள் கடன் தகுதியை பாதிக்கும். கடன் அறிக்கையை வழக்கமாக பரிசோதிப்பதன் மூலம் இதைக் கண்டறிய முடியும். எனவே கிரெடிட் அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து பரிவர்த்தனைகளை சரி பார்க்க வேண்டும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications