நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா..? அப்ப முதல்ல இதை செய்யுங்க.. இல்லாட்டி கஷ்டம் தான்..!

இந்த உலகில் யாருக்குத்தான் கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசை இருக்காது! கோடீஸ்வரராக வேண்டும் என்பது ஒன்றும் பேராசை அல்ல. அது இப்போது எல்லாருக்குமே ஏற்படக்கூடிய நியாயமான ஆசைதான்.

மாதாந்திர சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம் கனவிலும் கோடீஸ்வரராக முடியாது என்று பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது. கஷ்டமான நிலை என்றாலும் இன்றைக்கு அது சாத்தியமாகி வருகிறது.

நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா..? அப்ப முதல்ல இதை செய்யுங்க.. இல்லாட்டி கஷ்டம் தான்..!

முன்பெல்லாம் முதலீடுகள் என்பது நிதித்துறை நிபுணர்கள் மட்டுமே கையாளுகின்ற ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலம் பல்வேறுதரப்பட்ட மூலதன திட்டங்கள் மக்களிடையே பரவி வருகிறது. இதன்மூலம் தனிநபர்கள் தங்களது பொருளாதார விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடிகிறது. கவனமாக முதலீடு செய்து வந்தால் ஒரு கோடி ரூபாயை எளிதாக சம்பாதிக்கும் நிலை வந்து விட்டது.

புத்திசாலித்தனமாக திட்டமிட்டு தேவையற்ற செலவீனங்களை தவிர்த்தால் யாரும் கோடீஸ்வரராகும் இலக்கை அடையலாம். சாதுர்யமான முதலீடுகள் தவிர வேறு சில விஷயங்களையும் கவனித்தால் ஒருவர் ஒரு கோடி ரூபாயை சம்பாதித்து விடலாம். இந்த ஒரு கோடி ரூபாயை சம்பாதிக்க 5 வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1. முதலீடு முக்கியம் : எல்லாவற்றுக்கும் மேலாக கோடீஸ்வரராக வேண்டுமென்றால் புத்திசாலித்தனமான முடிவுகளை ஒருவர் எடுக்க வேண்டும். எப்போதும் நிதித்துறை ஆலோசகரின் அறிவுறையைப் பெற்று சரியான உத்தியை பின்பற்றி அபாயம் குறைந்த முதலீடுகளை செய்ய வேண்டும். கூட்டு வட்டி என்பது ஒருவரது வருவாயை விரைவில் பெருக்கி விடும்.

2. பல்முனை முதலீடு முக்கியம் : பணக்காரர்கள் எல்லாருமே ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் பல்வேறு தரப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்டு, தங்கம் மற்றும் வெள்ளி, அரசு பத்திரங்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். இதன் மூலம் முதலீட்டில் ஏற்படும் சரிவை பாதுக்காக்க முடியும்.

3. 50-30-20 பட்ஜெட் திட்டம் : பட்ஜெட்டை திட்டமிடுவது நீண்ட காலத்துக்கு உங்களை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து தேவையற்ற செலவுகளை தவிர்க்கச் செய்து விடும். தனிநபர்கள் 50-30-20 என்ற பங்கில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் வருமானத்தில் அடிப்படை தேவைகளுக்கு 50 சதவீதம், சுய விருப்பங்களுக்காக 30 சதவீதம், சேமிப்புகளுக்கு 20 சதவீதம் என பிரித்துக் கொள்ள வேண்டும்.

4. அவசரகாலத்துக்கான திட்டங்கள் : வாழ்க்கையில் யாருக்கும் எந்த சமயத்திலும் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுவிடுவது யதார்த்தமான சூழலாகும். எனவே இதுபோன்ற சமயங்களில் காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு உறுதுணையாக வந்து நிற்கும். உங்கள் முதலீடு திட்டத்தில் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ், டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் லைப் இன்சூரன்ஸ் இருக்க வேண்டியது அவசியமாகும்.

5. ஆடம்பரப் பொருட்களுக்காக தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் : மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலான நபர்களுக்கு தேவையற்ற ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்வது பழக்கமாக உள்ளது. கேட்ஜெட்கள், சொகுசு கார்கள், வருவாயை மீறிய பட்ஜெட் வீடுகள் போன்றவை இதில் அடங்கும். இதனால் அவர்களுக்கு தேவையற்ற கடன்சுமை ஏற்படுகிறது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் முடியவே முடியாத மாதாந்திர இஎம்ஐகள், கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவை பெரும் நெருக்கடியைத் தந்து விடுகின்றன. வருமானத்துக்குத் தகுந்த கார்கள், ஆக்சசரிகள் உங்கள் எதிர்கால நிதி நிலைமையை வலுவாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+