எல்ஐசி (LIC) பீமா ரத்னா திட்டம் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் வழங்கப்படும் சிறந்த ஆயுள் காப்பீட்டு சேமிப்புத் திட்டமாகும்.
இந்த பாலிசியில் குறிப்பிட்ட காலம் வரை பிரீமியம் செலுத்துவதன் மூலம் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
அதோடு பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், பாலிசிதாரரின் குடும்பமும் பலன் பெறலாம்.
நிதி ரீதியாக பலன்
இந்த திட்டம் சந்தையுடன் தொடர்பில்லாத ஒரு திட்டமாகும். அத்தோடு தரகர்கள், இன்சூரன்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், கார்ப்பரேட் முகவர்கள் மற்றும் பொதுவான சேவை மையங்கள் மூலம் எளிதாக பெறக்கூடிய, தனிப்பட்ட திட்டமாகும்.இந்த திட்டத்தின் மூலம் பாலிசிதாரர் பல்வேறு வகையான நிதி ரீதியாக பலனை அடையலாம். இறப்பு பலனும் இருப்பதால் பாலிசிதாரர் இல்லாவிட்டாலும், நிதி ரீதியாக நல்லதொரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
பிரீமியம் எப்படி?
எல்ஐசி பீமா ரத்னா திட்டத்திற்கான பிரீமியத்தை மாதந்தோறும் (NACH மூலம் மட்டும்), காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம்.
முன்னர் செலுத்தப்படாத பிரீமியங்களுக்கான சலுகை காலம் ஆண்டு, அரையாண்டு அல்லது காலாண்டு பிரீமியங்களுக்கு 30 நாட்கள் மற்றும் மாதாந்திர பிரீமியங்களுக்கு 15 நாட்கள் ஆகும்.
தள்ளுபடி உண்டு
வருடாந்திர மற்றும் அரையாண்டு முறைகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட பிரீமியங்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் அடிப்படைத் தொகையில் அதிக காப்பீட்டுத் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. இது பாலிசிதாரர்களுக்கு மேலும் பயனுள்ள ஒன்றாக பார்க்கப்படுகிரது.
புதுபித்துக் கொள்ள முடியுமா?
பாலிசிக்கான பிரீமியம் செலுத்திய நாளிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்குள் பாலிசி முதிர்வு முடிவதற்குள் தொடர்ச்சியாக பாலிசியை புதுப்பிக்க முடியும்.
அதே சமயம் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முழு பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால், பாலிசி முற்றிலும் செல்லாததாகக் கருதப்படும்.
சரண்டர் மதிப்பு
குறைந்தபட்சம் 2 வருட பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால், பாலிசி காலம் முடியும் வரை அது செலுத்தப்பட்ட பாலிசியாக தொடரும். இரண்டு முழு ஆண்டு பிரீமியங்களைச் செலுத்திய பிறகு, பாலிசியை சரண்டர் செய்யலாம் மற்றும் சிறப்பு சரண்டர் மதிப்பு அல்லது உத்தரவாதமான சரண்டர் மதிப்புக்கு சமமான சரண்டர் மதிப்பை எல்ஐசி கணக்கீடு செய்து செலுத்தும்.
கடன் வசதி உண்டு
குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஆவது பிரீமியத்தைச் செலுத்திய பிறகு கடன் வசதியும் உண்டு. இது நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கான சரண்டர் மதிப்பில் 90% மற்றும் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு சரண்டர் மதிப்பில் 80% வரை வழங்கப்படும். மொத்தத்தில் அவசர தேவைகளுக்கு பாலிசிதாரர் கடன் வசதியும் பெறலாம் என்பதல் இதுவும் பயனுள்ள ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இறப்பு பலன் உண்டு
எல்ஐசி பீமா ரத்னா திட்டம் பாலிசிதாரர்களுக்கு இறப்பு பலன், உயிர் வாழும் பலன், முதிர்வு நன்மை மற்றும் உத்தரவாதமான பிற நன்மைகள் போன்ற பல நிதி நன்மைகளை வழங்குகிறது.
பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்தால், இறப்புப் பலன் அளிக்கப்படும். இதில் இறப்பின் மீதான உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் உத்திரவாத தொகையும் கிடைக்கும். இது வருடாந்திர பிரீமியத்தை விட ஏழு மடங்கு அதிகமாகவோ அல்லது அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 125% ஆகவும் இருக்கும்.
என்னென்ன பலன் எப்படி?
உயிர்வாழும் பலன் என்பது 15 வருட பாலிசி காலத்திற்கு, ஒவ்வொரு 13வது மற்றும் 14வது வருடத்தின் முடிவிலும் செலுத்தப்படும்.
இதே 20 வருட பாலிசி காலத்திற்கு ஒவ்வொரு 18 மற்றும் 19வது வருடமும், 25 ஆண்டு பாலிசி காலத்திற்கான பலன் ஒவ்வொரு 23 மற்றும் 24வது வருடமும் செலுத்தப்படும். முதிர்வுப் பலன் என்பது முதிர்ச்சியின் போது உறுதியளிக்கப்பட்ட தொகையை உள்ளடக்கியது. இது வரை சேர்த்துள்ள உத்தரவாத பலன்களுடன் சேர்த்து அடிப்படைத் தொகையின் 50%-க்கு சமம்.
நிபந்தனைகள் உண்டு
எல்ஐசி-யின் பீமா ரத்னா திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
குறைந்தபட்ச அடிப்படைத் தொகையானது 5 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். அதிகபட்சத் தொகைக்கு வரம்பு என்பது இல்லை. பாலிசி காலமானது 15 வருடங்கள், 20 வருடங்கள் அல்லது 25 வருடங்களாக இருக்கலாம்.
வயது வரம்பு என்ன?
ஒரு பாலிசிதாரர் பிரீமியம் செலுத்தும் காலம் என்பது பாலிசி காலத்துடன் மாறுபடும்.
பாலிசிதாரரின் நுழைவு வயது 15 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு அதிகபட்சம் 55 ஆண்டுகள் ஆகும். பாலிசியின் முதிர்வுக்கான வயது வரம்பு 70 ஆண்டுகள்.


Click it and Unblock the Notifications