மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு ஒரு மிகச்சிறந்த முதலீட்டு முறை என்றும் இதில் சுமார் 20 வருடங்களுக்கும் அதிகமாக முதலீடு செய்பவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை திரும்ப பெறுவார்கள் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் அதாவது தினமும் 333 ரூபாயை 25 ஆண்டுகளுக்கு முன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் தற்போது 9 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.
அது மியூச்சுவல் நீச்சல் ஃபண்ட் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
வரி விலக்கு
ELSS மியூச்சுவல் என்பது ஒரு வகை ஈக்விட்டி ஃபண்ட் ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கும் ஒரே பரஸ்பர ஃபண்ட் ஆகும். இதன் மூலம் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும். ELSS ஃபண்ட் மிகவும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, லார்ஜ் கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் நிறுவனங்கள் உட்பட பல்வேறு மார்க்கெட் கேப் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.
நீண்ட கால முதலீடு
ELSS மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து தொடர்ந்து முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றன. இந்த ஃபண்ட்களை பொறுத்தவரை, நீண்ட காலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை அளிக்கும். மேலும் ELSS ஃபண்ட் மூலம், ஆண்டுக்கு ரூ.46,800 வரியாக சேமிக்கலாம்.
HDFC வரி சேமிப்பு ஃபண்ட்
HDFC வரி சேமிப்பு ஃபண்ட் என்பது மிகப்பெரிய வருவாய் அளித்த ELSS ஃபண்ட்களில் ஒன்று. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ரூ.9 கோடிக்கு மேல் உரிமையாளர்களாகிவிட்டனர்.
26 வருடங்களில் ரூ 9.39 கோடி
HDFC வரி சேமிப்பு ஃப்ண்ட் கடந்த 1996ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. HDFC வரிசேமிப்பு ஃபண்ட் 26 ஆண்டுகளில் அதாவது மார்ச் 31, 2022 நிலவரப்படி, இந்த ஃபண்ட் ஆண்டுக்கு 21.27 சதவீத SIP வருமானத்தை அளித்துள்ளது. அதன்படி, ஃபண்ட் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு மாதமும் HDFC வரி சேமிப்பு ஃபண்டில் ரூ. 10,000 (தினசரி ரூ. 333) முதலீடு செய்த முதலீட்டாளர் இதுவரை முதலீடு செய்த தொகை வெறும் ரூ. 31.20 லட்சம் மட்டுமே. ஆனால் இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ 9.39 கோடி கிடைத்துள்ளது.
எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு
HDFC வரி சேமிப்பு ஃப்ண்ட் பல்வேறு துறைகளில் முதலீடு செய்கிறது. நிதி, ஆட்டோமொபைல், எரிசக்தி, சுகாதாரம் முதல் தொழில்நுட்பத் துறை ஆகியவை இதில் அடங்கும். ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவை இந்த நிதியின் முதல் 5 பங்குகளாகும். உள்நாட்டுப் பங்குகளில், ஃபண்ட் 95.52% வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. இதில், 84.71% லார்ஜ்கேப் நிறுவனங்களும், 7.56% மிட் கேப் பங்குகளும், 3.25% ஸ்மால் கேப் பங்குகளும் அடங்கியுள்ளது.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications