பொதுவாக மூத்த குடி மக்கள் என்றாலே பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். பாதுகாப்பு என்பதோடு நல்ல லாபம் ஈட்டும் திட்டங்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
பொதுவாக மூத்த குடிமக்கள் எனும்போது பலருக்கும் இது முக்கிய ஆதாரமாகவும் இருக்கும் என்பதால், பாதுகாப்பினை கருத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
ஆக பொதுவாக மூத்த குடிமக்கள் மத்தியில் வங்கி வைப்பு நிதிகளே சிறந்த திட்டமாகவும் பார்க்கப்படுகின்றன.
வட்டி அதிகரிப்பு
குறிப்பாக வங்கி வைப்பு நிதிகளில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதமும் அதிகம் என்பதால், பெரும்பாலும் மூத்த குடி மக்கள் அதனையே தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் தனியார் துறையை சேர்ந்த டிசிபி வங்கி அதன் வைப்பு நிதிகளுக்கான (2 கோடி ரூபாய்க்குள்ளான ) வட்டி விகித்தத்தினை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு பிப்ரவரி 16, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
எவ்வளவு வட்டி?
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.75%
15 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.75%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையில் - 4.75%
6 மாதங்கள் முதல் 12 ,மாதங்களுக்குள் - 6.25%
12 மாதங்கள் - 7.25%
12 மாதங்களுக்கு மேல் 15 மாதங்களுக்குள் - 7.25%
15 மாதங்களுக்கு மேல் 18 மாதங்களுக்குள் - 7.85%
18 மாதங்களுக்கு மேல் 700 நாட்களுக்குள் - 7.50%
700 நாட்கள் - 7.50%
700 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரையில் - 7.60%
36 மாதங்கள் - 7.60%
36 மாதங்களுக்கு மேல் 60 மாதங்களுக்குள் - 7.60%
60 மாதங்களுக்கு மேல் 120 மாதங்களுக்குள் - 7.60%
மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு?
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 4.25%
15 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 4.25%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.50%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையில் - 5.25%
6 மாதங்கள் முதல் 12 ,மாதங்களுக்குள் - 6.75%
12 மாதங்கள் - 7.75%
12 மாதங்களுக்கு மேல் 15 மாதங்களுக்குள் - 7.75%
15 மாதங்களுக்கு மேல் 18 மாதங்களுக்குள் - 8.50%
18 மாதங்களுக்கு மேல் 700 நாட்களுக்குள் - 8%
700 நாட்கள் - 8%
700 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரையில் - 8.10%
36 மாதங்கள் - 8.10%
36 மாதங்களுக்கு மேல் 60 மாதங்களுக்குள் - 8.10%
60 மாதங்களுக்கு மேல் 120 மாதங்களுக்குள் - 8.10%
சேமிப்பு கணக்குக்கு?
பிப்ரவரி 14, 2023 அன்று சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டது. சேமிப்பு கணக்கு மூலமும் வாடிக்கையாளர்களுக்கு 7.25% வரையில் வட்டி விகிதம் அதிகபட்சமாக கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் இந்திய குடிமக்கள், NRE மற்றும் NRO-களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வங்கிகளும் அதிகரிப்பு?
சமீபத்திய வட்டி அதிகரிப்புகளுக்கு பிறகு வங்கிகள் பலவும் வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றனம். வங்கிகளில் எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ வங்கி, பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஜம்மு & காஷ்மீர் வங்கி, தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி மற்றும் யுனைட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி உள்ளிட்ட பலவும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications