ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான இறுதி காலக்கெடு 2025 டிசம்பர் 31ஆம் தேதியாகும். இந்த முக்கியமான பணியை உரிய காலத்தில் முடிக்கத் தவறினால், பான் கார்டு செயலிழந்து போகும், பண பரிமாற்றம் மற்றும் வருமான வரி தொடர்பான பல்வேறு பணிகளை செய்ய முடியாமல் போகும் என வருமான வரித் துறை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அபராதம்:
ஆதார்-பான் இணைக்க போதுமான அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் கொடுத்திருந்த நிலையில், இதை இன்னும் செய்யாதவர்கள் இனி இணைக்கும் பட்சத்தில் வருமான வரி துறையின் ஈபைலிங் இணையதளத்தில் முதலில் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். இந்த தொகையை ஆன்லைனில் செலுத்திய பின்னரே இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும்.
இருப்பினும், 2024 அக்டோபர் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பான் கார்டு பெற்றவர்கள் ரூ.1,000 அபராதத்தில் இருந்து விலக்கு பெறுகிறார்கள். இவர்கள் 2025 டிசம்பர் 31 வரை ஆதாருடன் பான் கார்டை இலவசமாக இணைக்கலாம்.
ஆதார்-பான் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்:
2025 டிசம்பர் 31க்குள் இணைக்கத் தவறினால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். இதனால் வருமான வரித் தாக்கல், வங்கி மற்றும் டிமேட் கணக்குகள் திறப்பது, அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவது, வரி ரீபண்ட் பெறுவது போன்ற நிதிப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.
செயலற்ற பான் அட்டை வைத்திருக்கும் நபர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் பெற முடியாது, ஒரு நாளுக்கு ரூ.50,000-க்குக் குறைவான வங்கி டெபாசிட்கள் மட்டுமே செய்ய முடியும், ரூ.10,000-க்கு அதிகமான வங்கி பரிவர்த்தனைகளை செய்ய தடை விதிக்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, அரசு மானியங்கள் பெறுவது, வங்கிக் கணக்குத் திறப்பது போன்ற அரசு சேவைகளும் கிடைக்காமல் போகும்.
பான்-ஆதார் இணைப்பு இல்லாதோர் புதிய பான் கார்டை பெறுவதிலும் சிக்கல் உள்ளது. பழைய அட்டை சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ இது மேலும் தீவிரமடையும். ஏனெனில், புதிய பான் விண்ணப்பத்திற்கு ஆதார் எண் கட்டாயம்.
பான்-ஆதார் இணைப்பை ஆன்லைனில் எளிதாக செய்வது எப்படி..?
முதலில், வருமான வரி துறையின் ஈபைலிங் இணையதளத்திற்கு (e-filing portal) சென்று சரியான பயனர் தகவல்களுடன் உள்நுழையவும். பதிவு செய்யாதவர்கள் புதிதாக பதிவு செய்துவிட்டு, உள்நுழைந்த பிறகு 'My Profile'-ல் உள்ள 'Personal Details' கீழ் இருக்கும் 'Link Aadhaar' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு, 'e-pay tax மூலம் செலுத்த தொடரவும்' என்பதைத் தேர்ந்தெடுத்து முன்னோக்கிச் செல்லவும். அங்கு பொருத்தமான மதிப்பீட்டு ஆண்டு (assessment year) மற்றும் பணம் செலுத்தும் வகையாக 'Other Receipts' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் செலுத்த வேண்டிய தொகை தானாகவே நிரப்பப்பட்டிருக்கும்; 'continue' கிளிக் செய்யவும்.
இதை தொடர்ந்து ஒரு சலான் (challan) உருவாக்கப்படும். பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, வங்கி இணையதளத்தில் பணத்தைச் செலுத்தவும்.
பணம் செலுத்திய பின் தானாக ஈபைலிங் இணையதளத்தில் பான்-ஆதார் இணைப்பை முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications