டிசம்பர் 4ஆம் தேதி முடிவடைந்த ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம், சந்தையின் டிமாண்ட் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைக் குறைக்கவில்லை.
இது வீட்டு கடன், கார் லோன், பர்சனல் லோன் வாங்கியவர்களுக்குச் சோகமான விஷயமாக இருந்தாலும் வங்கியில் பிக்ஸட் டெபாசிட் செய்தவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. ரெப்போ விகிதத்தைக் குறைக்காத காரணத்தால் பிக்ஸட் டெப்பாசிட் மீதான வட்டி விகிதம் குறையாது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எஸ்பிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்திற்குப் பின்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்குக் குறைந்தபட்சம் 2.9 சதவீதத்தில் இருந்து அதிகப்படியாக 6.2 சதவீதம் வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது.
- 7 நாட்கள் - 45 நாட்கள் - 2.90 சதவீதம்
- 46 நாட்கள் - 179 நாட்கள் - 3.90 சதவீதம்
- 180 நாட்கள் - 210 நாட்கள் - 4.40 சதவீதம்
- 211 நாட்கள் - 365 நாட்கள் - 4.40 சதவீதம்
- 1 வருடம் - 2 வருடங்கள் - 4.90 சதவீதம்
- 2 வருடங்கள் - 3 வருடங்கள் - 5.10 சதவீதம்
- 3 வருடங்கள் - 5 வருடங்கள் - 5.30 சதவீதம்
- 5 வருடங்கள் - 10 வருடங்கள் - 5.40 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
இந்தியாவிலேயே ரீடைல் வங்கி சேவையில் அதிக வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தைக் கொண்டுள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்குக் குறைந்தபட்சம் 2.5 சதவீதத்தில் இருந்து அதிகப்படியாக 5.50 சதவீதம் வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது.
- 7 நாட்கள் - 29 நாட்கள் - 2.50 சதவீதம்
- 30 நாட்கள் - 90 நாட்கள் - 3 சதவீதம்
- 91 நாட்கள் - 184 நாட்கள் - 3.50 சதவீதம்
- 185 நாட்கள் - 365 நாட்கள் - 4.40 சதவீதம்
- 1 வருடம் - 1.5 வருடங்கள் - 4.90 சதவீதம்
- 2 வருடங்கள் 1 நாள் - 3 வருடங்கள் - 5.15 சதவீதம்
- 3 வருடங்கள் 1 நாள் - 5 வருடங்கள் - 5.35 சதவீதம்
- 5 வருடங்கள் 1 நாள் - 10 வருடங்கள் - 5.50 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்குக் குறைந்தபட்சம் 2.5 சதவீதத்தில் இருந்து அதிகப்படியாக 6.25 சதவீதம் வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது.
- 7-14 நாட்கள் - 2.50 சதவீதம்
- 15-29 நாட்கள் - 2.50 சதவீதம்
- 30-45 நாட்கள் - 3 சதவீதம்
- 46-60 நாட்கள் - 3 சதவீதம்
- 61-90 நாட்கள் - 3 சதவீதம்
- 91 நாட்கள் - 6 மாதம் - 3.50 சதவீதம்
- 6 மாதம் - 9 மாதம் - 4.40 சதவீதம்
- 1 வருடம் 1 நாள் - 2 வருடங்கள் - 4.90 சதவீதம்
- 2 வருடங்கள் 1 நாள் - 3 வருடங்கள் - 5.15 சதவீதம்
- 3 வருடங்கள் 1 நாள் - 5 வருடங்கள் - 5.30 சதவீதம்
- 5 வருடங்கள் 1 நாள் - 10 வருடங்கள் - 5.50 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
யெஸ் வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
பல்வேறு நிதி நெருக்கடியில் இருந்து எஸ்பிஐ வங்கியின் உதவி மூலம் வர்த்தகத்திற்குத் திரும்பியுள்ள யெஸ் வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்குக் குறைந்தபட்சம் 3.50 சதவீதத்தில் இருந்து அதிகப்படியாக 7.50 சதவீதம் வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது.
- 7 நாட்கள் - 14 நாட்கள் - 3.50 சதவீதம்
- 15 நாட்கள் - 45 நாட்கள் - 4 சதவீதம்
- 46 நாட்கள் - 90 நாட்கள் - 4.50 சதவீதம்
- 3 மாதம் - 6 மாதம் - 5 சதவீதம்
- 6 மாதம் - 9 மாதம் - 5.50 சதவீதம்
- 9 மாதம் - 1 வருடம் - 5.75 சதவீதம்
- 1 வருடம் 1 நாள் - 2 வருடங்கள் - 6.50 சதவீதம்
- 2 வருடங்கள் 1 நாள் - 3 வருடங்கள் - 6.50 சதவீதம்
- 3 வருடங்கள் 1 நாள் - 10 வருடங்கள் - 6.75 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications