ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலக்கட்டத்தில் வங்கி துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. ஒரு காலகட்டத்தில் வங்கிகளில் சென்று மணிக்கணக்கில் நின்று செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம், இன்று நிமிடங்களில் வீட்டில் இருந்தே செய்யும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன.

அந்த வகையில் தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சில சேவைகளை, பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் எப்படி பணம் எடுப்பது? பணம் எப்படி அனுப்புவது என்று தான் பார்க்க இருக்கிறோம்.

எவ்வளவு அதிகபட்சம் பெறலாம்?

எவ்வளவு அதிகபட்சம் பெறலாம்?

நீங்கள் யாருக்கு அனுப்ப போகிறீர்களோ, அவர்களின் விவரங்களை கொடுத்து add beneficiaryயில் சென்று அப்டேட் செய்திருக்க வேண்டும். பெனிபிசியரி கொடுக்கும்போது சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இந்த முறையில் 10,000 ரூபாயும், மாதத்திற்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும்.

Beneficiary add செய்யுங்கள்

Beneficiary add செய்யுங்கள்


இதற்காக நீங்கள் முதலில் HDFC BANK Net Banking என்ற பகுதிக்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் Fund transfer என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு add a beneficiary என்பதை கிளிக் செய்து, யாருக்கு பணம் அனுப்பவேண்டுமோ அவரது விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.
அதில் பான் கார்டு அல்லது ஆதார் கார்டு விவரங்கள், மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு Confirm என்பதை கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொடுத்து கிளிக் செய்தால் வெற்றிகரமாக உங்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

எத்தனை பேருக்கு செய்யலாம்?

எத்தனை பேருக்கு செய்யலாம்?

இதில் ஒரு நாளைக்கு 7 பேர் வரையில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் உங்கள் கணக்கில் இணைக்கும் beneficiaryக்கு, ஹெச்.டி.எஃப்.சி.யில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை கொடுத்து சப்மிட் கொடுக்கும் முன்பு உங்களது விவரங்கள் சரியா என பார்த்து விட்டு கிளிக் செய்யவும்.

எங்கெல்லாம் பெறலாம்?

எங்கெல்லாம் பெறலாம்?


நீங்கள் பெனிபிசியரி சேமித்த 30 நிமிடங்களுக்கு பிறகு ஆக்டிவேட் ஆகும்.
இவ்வாறு நீங்கள் உங்களது நெட் பேங்கிங்கில் சேர்த்த பிறகு, இந்தியாவின் எந்த பகுதியிலும், ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம் மூலம் பெறலாம்.
எனினும் இந்த சேவையானது 24 மணி நேரத்திற்கு மட்டுமே செயலில் இருக்கும். அதற்குள் நாம் ஏடிஎம் சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி பணம் அனுப்புவது?

எப்படி பணம் அனுப்புவது?

இதற்காக நீங்கள் உங்களது ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் fund transfer என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு from என்ற ஆப்சனுக்கு நேராக உங்களது வங்கிக் கணக்கினை தேர்தெடுக்கவும். அதன் பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அதனை இரண்டாவது பாக்ஸில் கொடுத்து கிளிக் செய்யவும்.

அதன் பிறகு எவ்வளவு தொகை அனுப்ப போகிறீர்கள் என்பதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு confirm என்பதை கொடுக்கவும்.

இதன் பிறகு யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் போகும். அதனை வைத்து அருகிலுள்ள ஏடிஎம் சென்று வித்டிரா செய்து கொள்ளலாம்.

எனினும் இவ்வாறு கொடுக்கப்படும் request ஆனது 24 மணி நேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். 24 மணி நேரங்களுக்கு பிறகு நீங்க:ள் அனுப்பிய பணம் உங்களது கணக்கிற்கே திரும்ப வந்துவிடும்.

ஏடிஎம்மில் எப்படி எடுக்கலாம்?

ஏடிஎம்மில் எப்படி எடுக்கலாம்?

பணத்தினை பெற்றவர் ஏடிஎம்மில் சென்று பணத்தினை எடுக்க, அவரது மொபைல் எண்ணுக்கு 4 இலக்க ஓடிபியும் மற்றும் 9 இலக்க ஐடி-யினை பெறுவர்.

ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம்மிற்கு சென்று cardless cash என்ற ஆப்சனை தேர்தெடுக்கவும்.

அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி மற்றும் ஐடியை கொடுத்து, எவ்வளவு தொகை என்பதையும் கொடுக்க வேண்டும். உங்களது விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Did you know that you can withdraw cash from HDFC ATM without ATM card? Check details here

How can withdraw from HDFC bank ATM without card
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X