டெல்லி: உங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே சென்று இணைவிடுங்கள். ஏனெனில் அரசு ஏற்கனவே பல முறை அவகாசம் கொடுத்த பிறகு, ஜூன் மாதம் வரையில் மீண்டும் நீட்டித்துள்ளது.
அதுவும் மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி என்ற சூழலில், பலரும் கடைசி நேரத்தில் இணைக்க முற்பட்டதால், சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவகாசம் ஜூன் வரையில் நீட்டிக்கப்பட்டது.
ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுத்த அரசு, இந்த முறையும் மீண்டும் அவகாசம் கொடுக்குமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
அபராதத்தினை நினைவில் கொள்ளூங்கள்
ஆக உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது முடிவடையும் முன்பு இணைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் சென்று இணைக்க நினைத்தாலும், ஏதேனும் பிரச்சனை என்றால் கடைசியில் ரூ.1000 அபராதம் கட்ட நேரிடும். அதெல்லாம் சரி எப்படியெல்லாம் உங்கள் ஆதார் பான் நம்பரை இணைக்கலாம் . வாருங்கள் பார்க்கலாம்.
மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்
ஆதார் எண், பான் எண் நம்பரை எப்படி எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UID PAN, அதாவது 12 இலக்க ஆதார் எண், ஒரு space விட்டு, 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இணையம் மூலம் எப்படி இணைப்பது?
ஆதார் மற்றும் பான் எண்ணினை http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்றும் இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்.
ஆதார் மையம் மூலம் இணைக்கலாம்
ஒரு வேளை உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது மொபைல் எண் மூலமாக இணைக்க தெரியாது என்றால், நேரிடையாக ஆதார் மையத்திற்கு சென்றும் இணைக்கலாம். இதற்காக Annexure-I என்ற பார்மில் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications