தவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக்னாலஜிக்கள் வளர்ச்சி கண்டு வரும் இந்த நிலையில், வங்கி சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மயமாகி விட்டன. இன்று வங்கியில் பணத்தினை டெபாசிட் செய்வது கூட, டெபாசிட் மெஷினில் தான் செய்கிறோம்.

இப்படி வங்கியின் பல சேவைகளையும் ஆன்லைனிலேயே பெரும் வசதிகள் வந்து விட்டன.

எனினும் இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. நீங்கள் செய்யும் தவறு கூட, உங்களுக்கு எதிராக அமையலாம். ஆக நீங்கள் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனை செய்யும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும். அப்படி நீங்கள் சிறு தவறு கூட, அது உங்களுக்கே கூட பாதகமாக அமையலாம்.

பதற்றமான நிலை

பதற்றமான நிலை

நீங்கள் தவறான நபருக்கோ அல்லது தவறான வங்கிக் கணக்கிற்கோ மாறி பணத்தை அனுப்பி விட்டால், எப்படி பணத்தை திரும்ப பெறுவது? ஏனெனில் அந்த மாதிரியான சமயத்தில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதற்றம் மட்டுமே இருக்கும். அடுத்து என்ன செய்வது என யோசிக்காமல், பணம் போய்விடுமோ என்ற அச்சம் மட்டுமே தொற்றிக் கொள்ளும்.

 பணம் செலுத்துபவருக்கு தான் ரிஸ்க்

பணம் செலுத்துபவருக்கு தான் ரிஸ்க்


ஏனெனில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது பயனாளியின் வங்கி கணக்கு எண் மற்றும் மற்ற விவரங்களைக் கொடுப்பது பணம் செலுத்துபவரையே சேரும்.

ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் தவறான கணக்குக்குப் பணம் சென்றுவிட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், பணம் செலுத்தியவரின் வங்கி கணக்கு திரும்ப கிடைக்கும்.

வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்

வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்

எனினும் நீங்கள் தவறுதலாக அனுப்பிய வங்கிக் கணக்கு எண்ணில் யாரேனும் இந்தால் அது சிக்கல் தான். ஏனெனில் அந்தப் பணத்தை அந்த கணக்கு உரிமையாளரின் அனுமதியின்றி பணத்தை திரும்ப எடுக்க இயலாது. இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுண்டிற்கு பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகி பணத்தைத் தவறுதலாக செலுத்தியதை தெரிவிக்க வேண்டும்.

பணத்தை திரும்ப பெற முயற்சி

பணத்தை திரும்ப பெற முயற்சி

நீங்கள் தவறாக செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கி ஈடுபடும். அதன் படி, எந்த வங்கி அக்கவுண்டிற்குத் தவறுதலாகப் எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்து பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்.

பணம் பெறுதலை தடுத்து நிறுத்தலாம்

பணம் பெறுதலை தடுத்து நிறுத்தலாம்

எந்த வங்கிக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது, அந்த அக்கவுண்டுக்கு சொந்தகாரர் யார், அவருடைய மொபைல் எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும். பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப் பெற்றுத் தரவும் வங்கி உதவும். அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுண்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தும்.

வங்கி கணக்கிற்கு தடை விதிக்கப்படலாம்

வங்கி கணக்கிற்கு தடை விதிக்கப்படலாம்

அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச் சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம். சிலநேரம் தனது அக்கவுண்டில் கூடுதலாக பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தை செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை டெபாசிட் செய்யும் வரையில் சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

சட்ட நடவடிக்கை எடுக்கலாமா?

சட்ட நடவடிக்கை எடுக்கலாமா?

இதுவே அந்தப் பணத்தை திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர் மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: banks வங்கிகள்
English summary

Did you transfer to the money in wrong account number? Ho to get back immediately?

Bank latest updates.. Did you transfer to the money in wrong account number? Ho to get back immediately?
Story first published: Saturday, September 11, 2021, 21:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X