இந்தியாவில் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற செயலிகளில் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் போனில் ஸ்விக்கி, சோமேட்டோ செயலிகள் இல்லாமலே இருக்காது என்ற நிலைமை தற்போது உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு ஆர்டர் செய்த உணவு உண்ணும் பழக்கம் என்பது மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
ஆன்லைன் செயலிகள் வாயிலாக உணவு ஆர்டர் செய்வது நமக்கு சவுகரியத்தை கொடுத்தாலும் நமக்கே தெரியாமல் நம்முடைய சேமிப்பையும் எதிர்கால செல்வத்தையும் இது எந்த அளவுக்கு கரைக்கிறது என்பது குறித்து பிரபல பட்டய கணக்காளரான நிதின் கவுசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விரிவான பதிவை வெளியிட்டு இருக்கிறார் . அதில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தெரியாமலேயே ஒவ்வொரு மாதமும் உணவு டெலிவரி செயலிகள் வாயிலாக 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக செலவிடுகிறார்கள் என கூறுகிறார் .

இதே பணத்தை நீங்கள் முதலீட்டை நோக்கி திருப்பி விட்டால் எதிர்காலத்தில் உங்கள் பெரிய அளவில் உங்களுக்கு செல்வம் சேரும் எனக் கூறியிருக்கிறார் .இந்தியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு முதலீடு என்றால் அது இதுதான் என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு டெலிவரி செய்கிறார்கள் 35,000இல் இருந்து 40,000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். வாழ்க்கை ஹெக்டிக்காக இருப்பதாக நமக்கு நாமே கூறி கொண்டு உணவு ஆர்டர் செய்கிறோம் என தெரிவிக்கும் அவர், இந்த பணத்தை சேமித்தால் உங்களுக்கு எவ்வளவு பெரிய செல்வம் சேரும் தெரியுமா என குறிப்பிட்டு இருக்கிறார்.
நல்ல திறமை வாய்ந்த ஒரு சமையல் கலைஞரை வேலைக்கு நியமனம் செய்தால் மாதம் 5 முதல் 10 ரூபாய் வரை சம்பளம் கொடுத்தால் போதும், தரமான காய்கறிகள் மற்றும் பிற மளிகை பொருட்களை வாங்குவதற்கு 6 முதல் 12 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். அப்படி பார்க்கும்போது உங்களுக்கு உடனடியாக ஃபிரஸ்ஸாக சமைத்த உணவு கிடைக்கும், வீட்டில் தூய்மையான முறையில் சமையல் செய்திருப்பார்கள் , ஊட்டச்சத்தான உணவை உண்ண முடியும் .
இதற்கு நீங்கள் மாதத்திற்கு சராசரியாக 18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்தால் போதும், ஆன்லைன் ஆர்டரை தவிர்த்து இதனை பின்பற்றினாலே மாதத்திற்கு உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமிக்க முடியும். இந்த 15 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பெரிய அளவிலான செல்வம் கிடைக்கும் என கூறியிருக்கிறார். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யமுடியும் என்கிறார். இந்த ஒரு சின்ன ஹேக் மூலம் உங்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைக்கிறது ஆரோக்கியமான உடல் கிடைக்கிறது உங்களுடைய பர்சின் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications