2020ஆம் ஆண்டில் இந்திய முதலீட்டாளர்கள் சிலருக்கு அதிகளவிலான லாபம் கிடைத்திருந்தாலும், பலருக்கு நஷ்டம் அடைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதோடு லாக்டவும் மூலம் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, வருமானத்தை இழந்த காரணத்தால் நாட்டின் வர்த்தக சந்தையும் கடுமையாகப் பாதித்தது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது முதல் வேலைவாய்ப்பு சந்தையும் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் பங்குச்சந்தை முதலீடுகள் தற்போது மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிக லாபம் பெற எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்..? என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
முக்கிய அறிவுரை
இந்தியச் சந்தை தற்போது சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் இதேசூழ்நிலையில் சில முக்கிய ஆபத்துக்களும் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை துறை வாரியாகவும், சொத்து வாரியாகவும், நீண்ட கால அடிப்படையிலும் முதலீடு செய்வதே சிறந்தது.
அப்படிப் பல துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் தற்போது சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமாக துறைகளை நாம் முதலில் கண்டுப்பிடக்க வேண்டும்.
வங்கித்துறை
செப்டம்பர் காலாண்டில் வங்கித்துறை சிறப்பான லாபம், வருவாய் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அடைந்துள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் இதனால் வராக்கடன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்கிகள் பங்கு விற்பனை மூலம் அதிகளவிலான நிதியைத் திரட்டி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இதனால் வங்கித் துறையின் லாபமும் அதிகரித்துள்ளது, வராக் கடன் பாதிப்பும் குறைந்துள்ளது.
ஐடி துறை
ஐடி துறை ஜோ பிடன் வெற்றியின் காரணமாக விசா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்படும் என எதிர்பார்ப்புடன் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
மேலும் கொரோனா காலத்தில் வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர் வர்த்தக வளர்ச்சி அடைந்த நிறுவனமும் ஐடி துறை என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகியுள்ளது.
பார்மா
இதைத் தொடர்ந்து கொரோனாக்கான மருத்து கண்டுபிடிக்கும் பணியில் பல நிறுவனங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில் பார்மா துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது
உள்கட்டுமானம்
மத்திய அரசும் நிதியமைக்கசகமும் நாட்டின் உள்கட்டமைப்பு துறையை மேம்படுத்த அபுதாபி நாட்டைச் சேர்ந்த MIC Redwood 1 RSC Limited என்ற சவரின் வெல்த் பண்ட் நிறுவனம் உள்கட்டுமான துறையில் செய்யும் நீண்ட கால முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்திற்கு இந்திய நிதியியல் சட்டம் 2020-ன் கீழ் கொண்டு வரப்பட்ட இந்தப் பிரத்தியேக திட்டத்தின் கீழ் 100 சதவீத வருமான வரிச் சலுகை அளிக்க உள்ளது.
ஸ்டீல் மற்றும் சிமெண்ட்
100 சதவீத வரி சலுகை கிடைக்கும் காரணத்தால் MIC Redwood 1 RSC Limited நிறுவனம் விரைவில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதியுதவி செய்யும் இதன் எதிரொலியாக நாட்டில் ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது.
அன்னிய முதலீடுகள்
அக்டோபர் மாதத்தில் FPI முதலீட்டாளர்கள் வெறும் 22,033 கோடி ரூபாய் தொகை மட்டுமே முதலீடு செய்திருக்கும் நிலையில் நவம்பர் மாதத்தில் வெறும் 5 நாட்கள் வர்த்தகத்தில் 8,381 கோடி ரூபாய் தொகையை FPI முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
இதனால் இந்தியச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் காரணத்தால் அன்னிய முதலீட்டாளர்கள் விரும்பி முதலீடு செய்யும் துறையை கண்டுபிடிக்க வேண்டும்.
அரசுத் துறை நிறுவனங்கள்
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பல முன்னணி அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதேபோல் பல அரசு நிறுவனங்கள் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக பைபேக் திட்டம் அறிவித்து வரும் நிலையில் அரசு நிறுவனங்களுக்கான வர்த்தக சந்தை தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது.
10 நிறுவனங்கள்
நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களின் சூழ்நிலையை அறிந்துகொண்ட நிலையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தால் சிறப்பான லாபம் கிடைக்கும் என 5 லார்ஜ் கேப் பங்குகளையும், 5 மிட் கேப் பங்குகளையும் HDFC Securities நிறுவனம் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.
5 லார்ஜ் கேப் பங்குகள்
பார்தி ஏர்டெல்
- Add on dips: 400-403
- டார்கெட் விலை: 597
- வளர்ச்சி கணிப்புகள்: 33%
கேட்லியா ஹெல்த்கேர்
- Add on dips: 385-393
- டார்கெட் விலை: 508
- வளர்ச்சி கணிப்புகள்: 18%
ஐசிஐசிஐ வங்கி
- Add on dips: 395-405
- டார்கெட் விலை: 503
- வளர்ச்சி கணிப்புகள்: 14%
இன்போசிஸ்
- Add on dips: 1002-1006
- டார்கெட் விலை: 1205
- வளர்ச்சி கணிப்புகள்: 8%
யுனைடெட் ஸ்பிரிட்ஸ்
- Add on dips: 441-451
- டார்கெட் விலை: 645
- வளர்ச்சி கணிப்புகள்: 19%
5 மிட் கேப் பங்குகள்
அலிம்பிக் பார்மா
- Add on dips: 877-885
- டார்கெட் விலை: 1148
- வளர்ச்சி கணிப்புகள்: 17%
கிரெடின் ஆக்சஸ் கிராமின்
- Add on dips: 520-540
- டார்கெட் விலை: 797
- வளர்ச்சி கணிப்புகள்: 18%
குஜராத் கேஸ்
- Add on dips: 270-273
- டார்கெட் விலை: 356
- வளர்ச்சி கணிப்புகள்: 14%
Mphasis
- Add on dips: 1234-1238
- டார்கெட் விலை: 1,511
- வளர்ச்சி கணிப்புகள்: 13%
ரேடிகோ கைத்தான்
- Add on dips: 380-390
- டார்கெட் விலை: 545
- வளர்ச்சி கணிப்புகள்: 26%
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications