தீபாவளிக்கு சரவெடி சலுகை.. வங்கிகள் கொடுத்த சூப்பர் ஆஃபர்கள்.. இது வீடு வாங்க கட்ட சரியான நேரம்..!

சொந்த வீடு என்பது நம்மில் பலருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த கனவை நனவாக்க இது தான் சரியான தருணம் எனலாம்.

ஏனெனில் ஏற்கனவே ரெப்போ விகிதம் குறைவாக உள்ள நிலையில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் வங்கிகள் பற்பல சலுகைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் பல வங்கிகள் சலுகைகளை அறிவித்துள்ளன. ஆக இது வீடு கட்ட ,வாங்க மிக சரியான வாய்ப்பு எனலாம்.

வட்டி விகிதம் குறைப்பு

வட்டி விகிதம் குறைப்பு

அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா மற்றும் கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. அதோடு செயல்பாட்டுக் கட்டணங்களையும் சில வங்கிகள் குறைத்துள்ளன.

கனரா வங்கியின் சலுகை

கனரா வங்கியின் சலுகை

கனரா வங்கியானது தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.90%ல் இருந்து ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் பூஜ்ஜியமாகவும், சரியான ஆவணங்கள் இருப்பின் உடனடியாக கடனுக்கான ஒப்புதலும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனரா வங்கியின் இந்த அறிவிப்பானது குறுகிய காலத்திற்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சலுகைகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சலுகைகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியானது தற்போது வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தினை 6.60% ஆக குறைத்துள்ளது. அதே போல 100% செயல்பாட்டுக் கட்டணங்கள் தள்ளுபடி எனவும், டாக்குமெண்டேஷன் கட்டணங்களும் தள்ளுபடி செய்துள்ளது. ஆக வீடு வாங்க கட்ட இது சரியான தருணம் எனலாம்.

பேங்க் ஆப் பரோடாவின் சலுகைகள்

பேங்க் ஆப் பரோடாவின் சலுகைகள்

பேங்க் ஆப் பரோடா வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை விழாக்கால பருவத்தினை ஒட்டி, 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது 6.75%ல் இருந்து 6.50% ஆக குறைந்துள்ளது. பண்டிகை காலம் தொடங்கியுள்ள இந்த நிலையில், வீடு வாங்க, கட்ட நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம் எனலாம். பேங்க் ஆப் பரோடாவின் இந்த சலுகைகள் டிசம்பர் 31, 2021 வரையில் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இது புதியதாக கடன் வாங்க நினைப்பவர்களுக்கும், லோன் டிரான்ஸ்பருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

பேங்க் ஆப் இந்தியா சலுகைகள்

பேங்க் ஆப் இந்தியா சலுகைகள்

பேங்க் ஆப் இந்தியா விழாக்கால சலுகையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகளும், வாகன கடனுக்கு 50 அடிப்படை புள்ளிகளும் குறைத்துள்ளது. இதனடிப்படையில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.85% ஆக குறைந்துள்ளது. இது முன்னதாக 7.35% ஆக இருந்தது. இதே வாகனக் கடன் 6.50%ல் இருந்து ஆரம்பமாகிறது. இந்த சிறப்பு சலுகைகள் டிசம்பர் 31, 2021 வரையில் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர செயல்பாட்டுக் கட்டணமும் இந்த இரு கடனுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது புதியதாக கடன் வாங்குபவர்கள் அல்லது லோன் டிரான்ஸ்பருக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.

 

கோடக் மகேந்திராவின் சலுகைகள்

கோடக் மகேந்திராவின் சலுகைகள்

கோடக் மகேந்திராவின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 அடிப்பட புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டணமானது நவம்பர் 8 வரையில் அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. எனினும் இந்த வட்டி விகிதமானது வாடிக்கையாளார்களின் கடன் மதிப்பெண்னை பொறுத்து இருக்கும். இதுவும் புதியதாக கடன் வாங்குபவர்கள் அல்லது லோன் டிரான்ஸ்பருக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.

எஸ்பிஐ-ன் சலுகை

எஸ்பிஐ-ன் சலுகை

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் 6.70%ல் இருந்து ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது. இந்த வட்டி விகிதமானது. இந்த வட்டி விகிதமானது 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினால் 7.15% வட்டி விகிதம் என இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+