தீபாவளி ஷாப்பிங் : கிரெடிட் கார்டு Vs இஎம்ஐ –இதில் எது பெஸ்ட்? செலவு பண்றதுக்கு முன்னாடி இத படிங்க!!

இந்தியர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு பிஸியாக இருப்பார்கள். தீபாவளிக்காக துணி மணி வாங்குவது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது, வாகனங்கள் வாங்குவது என ஷாப்பிங் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்த பண்டிகை காலம் தான் நம் சேமிப்பும் கரையும் நம் கடன்களும் அதிகமாகும். இவ்வாறு ஷாப்பிங் செய்யும் போது எந்த வகையில் பணம் செலுத்தினால் நம் பட்ஜெட்டிற்கு நல்லது என பார்க்கலாம்.

ரொக்கம் / யூபிஐ / டெபிட் கார்டு : யூபிஐ அல்லது ரொக்கம் அல்லது டெபிட் கார்டு மூலம் முழு பணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்தி பொருட்களை வாங்குவது எளிமையானது. இதில் எந்தவிதமான தவணை முறைகளோ அல்லது செலுத்த வேண்டிய நிலுவை தொகையோ இருக்காது. ஆனால் ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவழிப்பது அவசர தேவைகளுக்காக கையில் இருக்க வேண்டிய ரொக்க பணத்தை குறைத்துவிடும். இது நாம் வாங்கும் பொருளின் விலையை பொறுத்தது.

தீபாவளி ஷாப்பிங் : கிரெடிட் கார்டு Vs இஎம்ஐ –இதில் எது பெஸ்ட்? செலவு பண்றதுக்கு முன்னாடி இத படிங்க!!

கிரெடிட் கார்டுகள்: பொதுவாக பண்டிகை கால ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் தான் அதிகம் நடக்கும். ஏனெனில் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க நிதி இல்லாதவர்களுக்கு கிரெடிட் கார்டுகள் உதவியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ரிவார்டு பாயிண்ட்களுக்காகவும் பலரும் இந்த சமயத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுடன் இணைந்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்குகின்றன. இதன் மூலம் சுமார் 10% வரை உடனடித் தள்ளுபடியும், ரிவார்டு பாயிண்டுகளும் கிடைக்கின்றன. உதாரணமாக, 50,000 ரூபாய் மதிப்பிலான பொருளுக்கு 5% தள்ளுபடி கிடைத்தால், செலுத்த வேண்டிய தொகை ரூ. 47,500 ஆக குறையும். இது ஒரு வகையில் நமக்கு சேமிப்பு.

Also Read

ஆனால் கிரெடிட் கார்டில் சில ஆபத்துகளும் உள்ளன. கிரெடிட் கார்டு பில் தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும், அது மட்டுமில்லாமல் உங்களால் திரும்ப செலுத்த முயன்ற தொகையை மட்டுமே கிரெடிட் கார்டில் ஸ்வைப் செய்தால் நல்லது. இல்லை என்றால் கடன் வலையில் சிக்க நேரிடலாம்.

நோ-காஸ்ட் இஎம்ஐ: வாகனங்கள், போன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கு 'நோ-காஸ்ட் இஎம்ஐ' முறையில் வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த முறையில் வாங்கும் பொருட்களின் இறுதி விலை, ஆரம்பத்தில் தோன்றுவதை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனெனில் அதில் மறைமுக கட்டணங்கள் இருக்கும். இஎம்ஐ முறையை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், முழு பணத்தை ஒரே முறையாக செலுத்தும் போது கிடைக்கும் உடனடி தள்ளுபடிகளை இழக்க நேரிடலாம்.

Recommended For You

மேலும் வங்கிகள் பொதுவாக செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி ஆகியவற்றை வசூல் செய்யும். 50,000 ரூபாய் மதிப்பிலான பொருளை 'நோ-காஸ்ட் இஎம்ஐ' மூலம் வாங்கும்போது, செயலாக்க கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி போக வாடிக்கையாளருக்கு ஆகும் இறுதி செலவு 50,600 ரூபாயை தாண்டக்கூடும்.

உங்களிடம் போதுமான பணம் இருக்கிறது, கிரெடிட் கார்டு பில்லை உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்துவீர்கள் என்றால், கிரெடிட் கார்டு மூலம் முழு தொகையை செலுத்துவதே அதிக பலனளிக்கும். கிரெடிட் கார்டு இல்லை, ஒரே நேரத்தில் பெரிய அளவில் பணம் கரைவதை தவிர்க்க விரும்புவோர் இஎம்ஐ முறையை தேர்வு செய்யலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+