தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கிறது. பல்வேறு குடும்பங்களும் மிக தீவிரமாக தீபாவளி ஷாப்பிங்கில் இறங்கி இருப்பார்கள். தீபாவளிக்கு புதிதாக துணி வாங்குவது , பட்டாசு வாங்குவது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது என அனைவரும் மிக பிசியாக இருக்கின்றனர்.இந்த தீபாவளிக்கு தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவு செய்யாமல் எப்படி சரியாக திட்டமிட்டு ஷாப்பிங்கையும் முடித்து பண்டிகையையும் உற்சாகமாக கொண்டாடுவது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் .
பட்ஜெட்: தீபாவளிக்கு எவ்வளவு பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்பதை பட்ஜெட் போட்டுக் கொள்வது நல்லது . என்னென்ன பொருட்கள் கட்டாயம் நீங்கள் வாங்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதற்கு உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது எந்த பொருட்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்யப் போகிறீர்கள் துணிமணிக்கு எவ்வளவு, பட்டாசு எவ்வளவு மற்றும் பூஜை உள்ளிட்ட பொருட்களுக்கு எவ்வளவு என்பன உள்ளிட்டவற்றை தயார் செய்து பட்ஜெட் போட்டுக் கொள்வது நல்லது.

தள்ளுபடிகள்: தற்போது ஆன்லைன் ஷாப்பிங் வந்துவிட்டது, ஆஃப்லைன் கடைகளிலுமே கூட பல்வேறு தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. எனவே என்னென்ன தளங்களில் எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் தள்ளுபடிகள் கிடைக்கின்றன . அதேபோல கடையில் வாங்குவதற்கும் ஆன்லைனில் வாங்குவதற்கும் உங்களுக்கு என்னென்ன தள்ளுபடி கிடைக்கிறது என்பதை ஒப்பீடு செய்து பாருங்கள்.
கிரேடிட் கார்டு: ஒருவேளை உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் பல்வேறு நிறுவனங்களும் கிரெடிட் கார்டுகளுக்கு என பிரத்தியேக கூப்பன்கள் மற்றும் கேஷ் பேக்குகளை அறிவிக்கின்றன. அவற்றை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும்போது உங்களுக்கு கேஷ் பேக் ஆகவும் ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ் முறையிலும் குறிப்பிட்ட சில தொகை சேமிக்க முடியும்.
பண்டிகை கால சலுகை: பண்டிகை காலத்தை ஒட்டி பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய பொருட்களுக்கு தள்ளுபடிகளை அறிவிக்கும் . இந்தியாவில் இந்த காலகட்டத்தில் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விற்பனை அதிகரிப்பதற்காக நிறுவனங்கள் கையாளக்கூடிய ஒரு உத்தி தான் . இந்த முறை ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே சிறந்த தள்ளுபடி எது என்பதை தேர்ந்தெடுத்து வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவற்றை வாங்கும் திட்டம் இருந்தால் வாங்கி கொள்வது சிறந்தது.
துணி மணி வாங்கும் போது சேமிப்பு: அண்மையில் தான் மத்திய அரசு துணிகள் வாங்கும் போது 2500 ரூபாய்க்கு கீழே இருக்கக்கூடிய துணிகளுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனவே துணிமணி வாங்குவதில் நீங்கள் சேமிக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் வாங்கக்கூடிய துணியின் விலை 2500 ரூபாய்க்கு கீழ் இருப்பதை உறுதி செய்து கொண்டால் 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே செலுத்தினால் போதும் . தேவையில்லாமல் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை . ஆனால் துணியின் மொத்த பில்லுக்கு இல்லாமல் ஒவ்வொரு தனிப்பட்ட துணிக்கு தான் பொருந்தும் என நினைவில் கொள்ளுங்கள்.
மொத்தமாக வாங்குவது: தீபாவளி பண்டிகைக்காக அண்டை வீட்டார் இருக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளை பகிரக்கூடிய வழக்கம் நம்முடைய இருக்கிறது. வடமாநிலங்களில் எல்லாம் வீட்டை அலங்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது. எனவே இதற்கு தேவையான பொருட்களை தனித்தனியாக வாங்குவதை விட மொத்தமாக வாங்கும்போது சற்றே விலை குறையும். உதாரணமாக இனிப்புகளை நீங்கள் மொத்தமாக கிலோ கணக்கில் வாங்கும் போது உங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் அதனை நீங்கள் வீட்டிற்கு கொண்டுவந்து ஒவ்வொரு உறவினருக்கு நண்பருக்கு எவ்வளவு என பிரித்து பரிசாக வழங்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications