இந்தியாவில் சராசரியாக 20 முதல் 25 வயதில் ஒருவர் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்.
பணம் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் எதிர்கால நன்மைக்காக சேமிக்க வேண்டும் என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு, மெடிக்கல் இன்சூரன்ஸ், காப்பீடு இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை சிறு வயதிலேயே தொடங்குவது மிகவும் நல்லது. இது குறித்து தற்போது பார்ப்போம்.
சம்பாதிக்க தொடங்கியவுடன்
ஒருவர் 20 முதல் 25 வயதில் பணம் சம்பாதிக்க தொடங்கிய உடன் செய்ய வேண்டிய முதல் வேலை சேமிப்பு. ஒருவர் தான் சம்பாதிக்கும் மொத்த தொகையில் 20 முதல் 30% வரை சேமிக்க வேண்டும் என்பது கட்டாயம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட்
நாம் சேமிக்கும் பணம் நல்ல வருவாயை தர வேண்டும் என்றால் அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் SIPதான் சரியான வழியாகும். 25 வயதில் சம்பாதிக்கும் ஒருவர் SIP மூலம் சேமிக்கத் தொடங்கினால் சேமிப்பு பழக்கம் தொடரும் என்பது மட்டுமின்றி அந்த பணம் அவர் ஓய்வு பெறும் போது ஒரு பெரிய தொகையாக திரும்ப கிடைக்கும் என்பதும் ஓய்வு பெற்றபின் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது
மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
மியூச்சுவல் ஃபண்ட்களில் ஸ்மால் கேப் ஃபண்ட், மிடில் கேப் ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட் என பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் இருக்கும் நிலையில் அவற்றை பொருளாதார ஆலோசகர் மூலம் அறிந்து சரியான ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்து கொள்ள வேண்டும்.
பிஎஃப் கணக்கு
ஒருவர் வேலையில் சேர்ந்த உடன் பிஎஃப் கணக்கு தொடங்குவது என்பது அவசியமான ஒன்று என அறிவுறுத்தப்படுகிறது. நிலையான வட்டி வழங்கும் இந்த பிஎஃப் கணக்கு தற்போது 7.1 சதவீதமாக உள்ளது. இந்த வட்டி சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் செய்யப்படும் உங்களது முதலீடு வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கு வரி இல்லாமல் கிடைக்கக்கூடிய பணம் என்பதால் எதிர்காலத்தில் கிடைக்கும் நன்மைகளில் இதுவும் ஒன்றாகும்
டேர்ம் இன்சூரன்ஸ்
மனித வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்பதால் டேர்ம் இன்சூரன்ஸ் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் ஆகும். உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பொருளாதார சிக்கல் இன்றி வாழ்வதற்கு கண்டிப்பாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை சிறு வயதிலேயே எடுத்துக்கொண்டால் பாலிசி தொகை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் செய்ய வேண்டிய உடனடி வேலைகளில் இதுவும் ஒன்றாகும்
மெடிக்கல் பாலிசி
நாம் லட்சக்கணக்கில் பணம் சேமித்து வைத்து இருந்தாலும் அத்தனை லட்சங்களும் ஒரே நாளில் மருத்துவ சிகிச்சைக்கு செலவாகும் என்பது பலரது கசப்பான அனுபவம் ஆகும். எனவே எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க கண்டிப்பாக ஒரு மெடிக்கல் பாலிசி தேவை. டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது நீங்கள் இறந்த பிறகு உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் ஒரு சலுகை என்றால் மெடிக்கல் இன்சூரன்ஸ் என்பது நீங்கள் உயிரோடு இருக்கும் போது எந்தவிதமான செலவும் இன்றி சிறிய சிகிச்சை முதல் பெரிய சிகிச்சைகள் செய்து கொள்ளும் ஒரு வசதி என்பது குறிப்பிடத்தக்கது
நான்கு விஷயங்கள்
எனவே சேமிப்பு, பிஎஃப் கணக்கு, டேர்ம் இன்சூரன்ஸ், மெடிக்கல் பாலிசி என இந்த நான்கு விஷயங்களை சம்பாதிக்கும் இளைஞர்கள் உடனடியாக செய்யவேண்டும் என பொருளாதார வல்லுனர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications