RD கணக்கு வச்சிருக்கீங்களா? 1 மாதத் தவணையை தவறவிட்டால் கணக்கு மூடப்படுமா? அபராதம் எவ்வளவு?

இன்றளவும் சாமானியர்களுக்கு பிடித்த முதலீட்டு திட்டம் என்றால் அது ரெக்கரிங் டெபாசிட் திட்டம் தான். மொத்தமாக சேமிக்க முடியாதவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. RD என்று சொல்லப்படுகிற இதற்கு மாதா மாதம் முதலீடு செய்தால் போதும். ஆனால் FD திட்டங்களுக்கு அப்படி செய்ய முடியாது. மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும்.

முதிர்வு காலம் வரும் வரை FD டெபாசிட்டை எடுக்கவும் முடியாது. எடுத்தால் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் RD டெபாசிட் 100 ரூபாய் முதல் தொடங்குகிறது. கூலி வேலை செய்பவர்களும் தங்களால் இயன்ற தொகையை சேமிக்க RD திட்டத்தையே தேர்வு செய்கின்றனர். நீங்களும் RD டெபாசிட் செய்பவர் என்றால் உங்களுக்குத்தான் இந்த பதிவு.

RD கணக்கு வச்சிருக்கீங்களா? 1 மாதத் தவணையை தவறவிட்டால் கணக்கு மூடப்படுமா? அபராதம் எவ்வளவு?

RD டெபாசிட் செய்பவர் தவணையை தவறவிட்டால் கணக்கு என்னவாகும்? உடனடியாக மூடப்படுமா? கணக்கைத் தொடர வங்கிகள் அவகாசம் வழங்குமா? அபராதம் உண்டா என்ற விபரங்களைப் பார்ப்போம்.

பல மாதங்கள் பணம் செலுத்துவதை தவிர்த்தால் என்ன நடக்கும்?: RD கணக்கு தொடங்கிய நபர் பல மாதங்கள் தவணைத் தொகை செலுத்தாமல் விட்டால்.. அவருடைய கணக்கு இர்ரெகுலர் கணக்காக வகைப்படுத்தப்பட்டு இறுதியில் கணக்கு மூடப்படும் வாய்ப்புள்ளது. இதனால் கிடைக்க வேண்டிய வட்டியும் குறைய கூடும். அதேபோல முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகையும் குறையும்.

Also Read

ஒரு தவணையை செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?: பேங்க் பசாரின் தலைமை நிர்வாக அதிகாரியான அதில் ஷெட்டி கூற்றுப்படி.. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளில் RD கணக்கு வைத்திருப்பவர் ஒரு மாதத் தவணையை தவறவிடும்போது 100 ரூபாய்க்கு, ரூ.1.50 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

உதாரணமாக நீங்கள் RD கணக்கில் மாதா மாதம் 10,000 ரூபாயை வரவு வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் ஒரு மாதத் தவணையை தவறவிட்டால் வங்கி உங்களிடம் இருந்து 150 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். அதன் மறு மாதம் நிலுவையில் உள்ள தவணைத் தொகை, அபராதத் தொகை, மறுமாதத்திற்கான தவணைத் தொகை என எல்லாவற்றையும் சேர்த்து செலுத்தி கணக்கை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

ஒரு சில வங்கிகள் நிலுவைத் தொகை செலுத்தப்படும் போது உங்களிடம் அபராதம் கேட்கலாம். ஆனால் சில வங்கிகள் முதிர்வு தொகையிலிருந்து அபராதத்தை கழித்துக் கொண்டு மீதித் தொகையை ஒப்படைக்கும்.

எத்தனை மாதங்கள் RD தவணையை செலுத்தாமல் இருக்கலாம்?: முதல் தவணையை தவறவிட்ட உடன் வங்கிகள் உங்கள் கணக்கை மூடாது. உங்களுக்கு தொடர்ந்து அவகாசம் வழங்கும். தொடர்ந்து நீங்கள் 5 முதல் 6 மாதத் தவணையை செலுத்தாத போதிலும் கிரேஸ் பீரியட் வழங்கப்படும். இதற்குள் நீங்கள் தவறவிட்ட தவணைத் தொகையை செலுத்தி விட்டால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லை என்றால் உங்கள் கணக்கு இர்ரெகுலர் கணக்காக வகைப்படுத்தப்படும். கிரேஸ் பீரியட் ஒவ்வொரு வங்கியையும் பொருத்து மாறுபடலாம். எனவே இதை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

பல தவணைகளை தவறவிடும்போது என்ன நடக்கும்?: அதில் ஷெட்டியின் கூற்றுப்படி தொடர்ந்து 6 மாதத் தவணையை செலுத்தத் தவறினால் உங்கள் கணக்கு இர்ரெகுலர் கணக்காக மாற்றப்படும். இதனால் முதிர்வு காலத்திற்கு முன்பே உங்கள் RD கணக்கு மூடப்படும் வாய்ப்புள்ளது.

கணக்கு மூடப்பட்டால் என்ன நடக்கும்?: தவணைத் தொகை செலுத்தாத ஒருவரின் RD கணக்கு மூடப்படும் பட்சத்தில் மீதமுள்ள தொகையானது அவருடைய சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது. இதுவும் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியைப் பொறுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+