சென்னை: இந்தியாவில் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் sip எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் நடைமுறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டிலேயே அதிக லாபம் காண முடியும் எனக் கூறுகின்றனர். எனவே தான் சிறு வயதிலிருந்தே முதலீட்டு பயணத்தை தொடங்கி விட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
நீண்டகால அளவில் நாம் முதலீடு செய்யும்போதுதான் காம்பௌண்டிங் முறையில் நமக்கு குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைக்கும் . அப்படி மாதம் தோறும் 500 ரூபாயை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் நமக்கு எவ்வளவு தொகை கிடைக்கும், மாதந்தோறும் 1000 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பன உள்ளிட்டவற்றை உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ரூ.500 முதலீடு 30 ஆண்டு காலம்: ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொண்டால் 30 ஆண்டுகளுக்கு அதாவது 360 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 1.8 லட்சம் ரூபாய் தான், ஆனால் 30 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 15.85 லட்சம் என மொத்தமாக 17.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.1000 முதலீடு 20 ஆண்டு காலம்: ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொண்டால் 20 ஆண்டுகளுக்கு அதாவது 240 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 2.4 லட்சம் ரூபாய் தான், ஆனால் 20 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 7.59 லட்சம் என மொத்தமாக 9.99 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.5000 முதலீடு 10 ஆண்டு காலம்: ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொண்டால் 10 ஆண்டுகளுக்கு அதாவது 120 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 6 லட்சம் ரூபாய் ஆனால் 10 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 5.62 லட்சம் என மொத்தமாக 11.62 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.10,000 முதலீடு 5 ஆண்டு காலம்: 5 ஆண்டுகளுக்கு அதாவது 60 மாதங்களுக்கு நீங்கள் செய்யும் முதலீடு 6 லட்சம் ரூபாய், ஆனால் 5 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 2.25 லட்சம் மட்டுமே, மொத்தமாக உங்களுக்கு 8.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதனை ஆய்வு செய்கையில் நமக்கு முக்கியமாக தகவல் கிடைக்கிறது. குறைந்த தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது காம்பவுண்டிங் என்ற மேஜிக் மூலம் உங்கள் பணம் பலமடங்கு உயர்கிறது. அதுவே குறுகிய காலத்திற்கு நீங்கள் பெரிய தொகை முதலீடு செய்தாலும் குறைந்தபட்ச பணமே கிடைக்கிறது. எனவே முதலீடு என வரும் போது இளம் வயதிலேயே தொடங்கி நீண்ட காலத்திற்கு அதனை தொடர்ந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்.
Story Written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications