சென்னை: நாம் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே நம்முடைய பணம் நமக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே படிப்படியாக அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய சேமிப்பு கணக்கில் பணத்தை வீணாக வைத்திருக்காமல் அதை முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் நாம் 5 லட்சம் ரூபாய் பணத்தை எப்படி பிரித்து முதலீடு செய்தால் ஐந்தே ஆண்டுகளில் அதனை 8 லட்சம் ரூபாயாக மாற்ற முடியும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். முறையாக திட்டமிட்டு பிரித்து பணத்தை முதலீடு செய்யும்போது ஐந்தாண்டு காலத்திலேயே நம்முடைய 5 லட்சம் ரூபாய் பணம் 8.8 லட்சம் ரூபாயாக உயரும். 5 லட்சம் ரூபாயை நாம் நான்கு இடங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

40% ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு : கைவசம் இருக்கும் 5 லட்சம் ரூபாயில் 40 சதவீத தொகையை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது 2 லட்சம் ரூபாய் இந்த இரண்டு லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு , ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்து விட வேண்டும். 2 லட்சம் ரூபாய் என்பது ஐந்து ஆண்டுகளில் முடிவில் உங்களுக்கு 3.52 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
20% கடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு: அடுத்ததாக உங்களுடைய 5 லட்சம் ரூபாய் மூலதன பணத்தில் 20% அதாவது 1 லட்சம் ரூபாயை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறோம் , ஆண்டுக்கு இது 10% லாபம் தருகிறது. நாம் செய்த முதலீடு 1 லட்சம் ரூபாய் என்றால் ஐந்து ஆண்டுகள் முடிவில் நமக்கு கிடைக்கும் தொகை 1.61 லட்சம் ரூபாய் .
20% தங்கம்: அடுத்ததாக மூலதனத்தில் 20 சதவீதம் தொகை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஐந்து ஆண்டு காலம் முதலீட்டு காலம். பொதுவாக தங்கம் சராசரியாக 10% வரை லாபம் தருகிறது என வைத்துக்கொள்வோம். முதலீடு செய்த பணம் 1 லட்சம் ரூபாய், ஐந்து ஆண்டுகள் முடிவில் உங்களுடைய முதலீடு 1.61 லட்சமாக உயர்ந்திருக்கும்.
20% தேசிய சேமிப்பு பத்திரம்: மூலதனத்தில் மீதம் இருப்பது 20% தொகையான 1 லட்சம் ரூபாய். அதனை தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்து விட வேண்டும் . ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 7.77% வட்டி வருகிறது.செய்த முதலீடு 1 லட்சம் ரூபாய் நமக்கு கிடைக்கக்கூடிய மொத்த பணம் 1.44 லட்சம் ரூபாய் .
நம் கையில் இருக்கும் ஐந்து லட்சம் ரூபாயை நான்கு விதங்களாக பிரித்து நாம் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு முதலீடு செய்யும் போது இறுதியில் நமக்கு கிடைக்க கூடிய தொகை 8.18 லட்சம் ரூபாய் . அதாவது 63 சதவீதம் லாபம் கிடைக்கிறது . இந்த முதலீட்டு உத்தியில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மட்டுமே ஏற்ற இறக்கம் காணக்கூடிய ஒரு முதலீடாக இருக்கும் மீதம் உள்ள மூன்று திட்டங்களுமே நிலையான வருமானம் தருபவையாக இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications