25 வயது Vs 30 வயதில் SIP முதலீடு : 50 வயதாகும் போது யார் கையில் அதிக பணம் இருக்கும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது .பங்குச்சந்தைகளில் பங்குகளை தேர்வு செய்து அவற்றை தொடர்ந்து கண்காணித்து முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியாது என்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மிகச் சிறந்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளன .

தற்போது வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாதம் தோறும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதை நாம் பரவலாக காண முடிகிறது . இதனால் தான் சிறு வயதிலிருந்து முதலீட்டை தொடங்கி விட வேண்டும் அப்போதுதான் குறைந்த முதலீடு உங்களுக்கு காம்பவுண்டிங் முறையில் மேஜிக் செய்து உங்களுக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டி தரும்.

25 வயது Vs 30 வயதில் SIP முதலீடு : 50 வயதாகும் போது யார் கையில் அதிக பணம் இருக்கும்?

இதற்காக தான் வேலைக்கு செல்ல தொடங்கிய பிரஷர் நிலையிலிருந்து எஸ்ஐபி முதலீடுகளை தொடங்கி விட வேண்டும் என முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏன் சிறுவயதிலேயே முதலீட்டை தொடங்கி விட வேண்டும் என்பதை ஒரு உதாரணத்தோடு நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நபர் 25 வயதில் தன்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடங்குகிறார் மற்றொரு நபர் 30 வயதில் தொடங்குகிறார் என வைத்துக்கொள்வோம். 50 வயது ஆகும்போது இந்த இருவரும் செய்த முதலீடு எவ்வளவு அவர்களுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு என்பதை தற்போது கணக்கிட்டுக் கொள்ளலாம்.

25 வயது நபர் மாதம் 5000 ரூபாயை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார். ஆண்டுக்கு இவருடைய முதலீடு 10% லாபம் தருகிறது. 50 வயதாகும்போது இவர் கையில் இருக்கக்கூடிய மொத்த தொகை 62 லட்சம். இதுவே ஒரு நபர் 30 வயதில் தான் மியூச்சுவல் ஃபண்டு முதலீடை தொடங்குகிறார் . அவரும் இதேபோல மாதம் 5000 ரூபாயை தன்னுடைய 50 வயது வரை முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். 50 வயது ஆகும் போது இவருக்கு கிடைக்கக்கூடிய தொகை 36 லட்சம் ரூபாய்.

இதைத்தான் காஸ்ட் ஆஃப் டிலே என அழைக்கிறார்கள். அதாவது 25 வயதில் எஸ்ஐபி முதலீட்டை தொடங்கிய நபர் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பார் அவருக்கு கூடுதலாக 47 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் மொத்தமாக 62 லட்சம் ரூபாய் கையில் இருக்கும். 30 வயதில் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முதலீடு தொடங்கிய நபர் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார் அவருக்கு கிடைத்த லாபம் 24.19 லட்சம் தான். மொத்த தொகையாக அவரிடம் 36.19 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும்.

5 ஆண்டுகள் முதலீட்டை தள்ளிப் போட்டதற்காக இந்த நபர் 26 லட்சம் ரூபாய் லாபத்தை இழக்கிறார் என்பது நமக்கு இந்த கணக்கீடுகளின் மூலமே தெரிய வருகிறது. எனவே தான் வேலைக்கு சென்ற உடனே எஸ்ஐபி போன்ற முதலீடுகளை தொடங்கி விட வேண்டும் . ஏனெனில் சிறுக சிறுக சேமிப்பதற்கான ஒரு வாய்ப்பை இவை வழங்குகின்றன. ஒருவேளை எனக்கு 30 வயதாகிவிட்டது இதுவரை நான் முதலீடு எதுவும் மேற்கொள்ளவில்லை என்பவர்கள் கூட தற்போது முதலீடு செய்ய தொடங்கினால் ஓய்வு காலத்தில் ஒரு சிறந்த நிதி தொகுப்பை பெற்றிருக்க முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+